ஜோதி (நடிகை)
ஜோதி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். புதுக்கவிதை, இரயில் பயணங்களில் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர். [1][2][3] டி. ராஜேந்தரின் இரயில் பயணங்களில் மற்றும் ரஜினிகாந்த் நடித்த புதுக்கவிதை போன்ற படங்களில் நடித்த ஜோதி நடிப்பில் முத்திரை பதித்தார்.
ஜோதி (நடிகை) | |
---|---|
பிறப்பு | ஜோதி 1963 |
இறப்பு | 18 மே 2007[1] சென்னை, இந்தியா | (அகவை 44)
தேசியம் | இந்தியாn |
பணி | நடிகை |
2007 இல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மார்பக புற்றுநோயால் ஜோதி இறந்தார். அப்போது ஜோதிக்கு வயது 44 ஆகும். டி ராஜேந்தர் இயக்கிய இவரது முதல் திரைப்படமான "இரயில் பயணங்களில்" படம் வெற்றிப் படமாக ஆனபோது இவர் வெளிச்சத்திற்கு வந்தார். 80 களின் நடுப்பகுதியில் கவிதாலயா தயாரித்த "புதுக்கவிதை" படத்தில் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகருக்கு தமிழ் திரைப்பட உலகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
தூர்ப்பு வெல்லே ரெயிலு என்ற படத்தின் வழியாக தெலுங்கு திரையுலகத்திற்கு இவர் அறிமுகமானார்.[சான்று தேவை]
பகுதி திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1979 | தூர்ப்பு வெல்லோ ரெயிலு | அலுமேலு | தெலுங்கு | |
1980 | வம்ச விருட்சம் | தெலுங்கு | பிலிம்பேர் சிறந்த நடிகை விருது (தெலுங்கு) | |
1981 | இரயில் பயணங்களில் | தமிழ் | ||
1981 | கன்னித் தீவு | தமிழ் | ||
1982 | புதுக்கவிதை | உமா | தமிழ் | |
1982 | சட்டம் சிரிக்கிறது | தமிழ் | ||
1982 | நெஞ்சங்கள் | தமிழ் | ||
1982 | மல்லே பண்டரி | சியாமளா | தெலுங்கு | |
1982 | கோரிதரிச்ச நாள் | மலையாளம் | ||
1982 | மரோ மலுப்பு | தெலுங்கு | ||
1982 | ஆ திவசம் | மலையாளம் | ||
1983 | அஸ்திரம் | ரேகா | மலையாளம் | |
1983 | கிராமத்து கிளிகள் | தமிழ் | ||
1983 | ஈ தேசம்லோ ஒக்க ராஜு | தெலுங்கு | ||
1983 | ஈ பிள்ளக்கு பிள்ளவுத்தந்தா | தெலுங்கு | ||
1984 | சுவர்ண கோபுரம | மெர்சி | மலையாளம் | |
1984 | சங்கரி | கிரேசி | தமிழ் | |
1984 | முடிவல்ல ஆரம்பம் | தமிழ் | ||
1985 | இராமன் ஸ்ரீராமன் | வித்யா | தமிழ் | |
1985 | கலிகாலம் ஆடதி | தெலுங்கு | ||
1985 | பலே தம்முடு | நீலவேணி | தெலுங்கு | |
1985 | சிறீ கட்னா லீலலு | தெலுங்கு | ||
1987 | அக்னி புத்ருடு | காயத்திரி | தெலுங்கு | |
1987 | ராக லீலா | தெலுங்கு | ||
1989 | அசோக சக்கரவர்த்தி | ருக்மணி | தெலுங்கு | |
1990 | சின்ன கோடலு | தெலுங்கு | ||
1991 | ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேசன் | தெலுங்கு | ||
1991 | இந்திர பவனம் | தெலுங்கு | ||
1991 | சூரியா ஐபிஎஸ் | பார்வதி | தெலுங்கு | |
1991 | நிர்ணயம் | நளினி | தெலுங்கு | |
1992 | கில்லர் | லலிதா | தெலுங்கு | |
1992 | தர்ம சேத்திரம் | பேனர்ஜியின் சகோதரி | தெலுங்கு | |
1992 | கோக்கர் மாமா சூப்பர் அல்லுடு | தெலுங்கு | ||
1992 | போலிஸ் பிரதர்ஸ் | தெலுங்கு | ||
2000 | பார்த்தேன் ரசித்தேன் | சங்கரின் தாய் | தமிழ் | |
2000 | வண்ணத் தமிழ்ப்பாட்டு | புவணாவின் தாய் | தமிழ் | |
2001 | உள்ளம் கொள்ளை போகுதே | ஜோதியின் தாய் | தமிழ் | |
2001 | கடல் பூக்கள் | பீட்டரின் தாய் | தமிழ் | |
2002 | அல்லி அர்ஜுனா | கிசோரின் தாய் | தமிழ் | |
2002 | ராஜா | ராஜாவின் தாய் | தமிழ் | |
2002 | ஸ்டைல் | விஜியின் தாய் | தமிழ் | |
2003 | காலாட்படை | பாமா | தமிழ் | |
2003 | அன்பு | அன்புவின் தாய் | தமிழ் |
இறப்பு
மார்பக புற்றுநோயால் அவதிப்பட்ட இவர், இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 18 மே 2007 இரவு, தன் 44 வது வயதில் இறந்தார். விவாகரத்து பெற்ற ஜோதி, தனது மகளுடன் சென்னை புறநகரான நீலகரையில் தங்கியிருந்து இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் பெசன்ட் நகர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. [1]
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 "Superstar Rajinikanth’s heroine passed away". chennai365.com. http://chennai365.com/news/superstar-rajinikanths-heronie-passed-away/. பார்த்த நாள்: 2014-11-06.
- ↑ "Tamil Actress Jothi passes away". news.oneindia.in. http://news.oneindia.in/2007/05/19/tamil-actress-jothi-passes-away-1179578507.html. பார்த்த நாள்: 2014-11-06.
- ↑ "Yesteryear actress dead". indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924191439/http://www.indiaglitz.com/yesteryear-actress-dead-tamil-news-31226. பார்த்த நாள்: 2014-11-06.