அன்பு (2003 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்பு
இயக்கம்தளபதிராஜ்
திரைக்கதைஎன். பிரசன்னகுமார்
இசைவித்தியாசாகர்
நடிப்புபாலா
தீபு
வடிவேலு (நடிகர்)
கலையகம்உதயகீதா சினி கிரியேசன்ஸ்
வெளியீடு6 பெப்ரவரி 2003 (2003-02-06)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்பு (Anbu) என்பது 2003ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும். தளபதிராஜ் எழுதி இயக்கிய இப்படத்தில் பாலா மற்றும் தீப்பு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[1] இது திரைப்பட விமர்சகர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் சராசரியாகக் குறைவான வரவேற்பைப் பெற்றது.[2][3]

கதை

அரசியல்வாதியான கருப்பையா ( விஜயகுமார் ) என்பவரின் மகன் அன்பு ( பாலா ), வீணா (தீப்பு) ஆகியோர் காதலர்கள். ஆனால் விதிவசத்தால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். வீணா மற்றொரு சாதியைச் சேர்ந்தவர், அவரது தந்தை அவர்களின் திருமணத்திற்கு எதிரானவர். அன்பு நாட்டில் இல்லாத நிலையில் ஆதித்யாவை (ஆதித்யா) திருமணம் செய்து கொள்கிறாள். இதற்கிடையிலான காலத்தில் அன்பு வெளிநாடு சென்றிருக்கிறா். அவர் திரும்பி வந்தபிறகு, வீணாவின் திருமணத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைகிறார். அவர் சுப்பையாவுடன் ( வடிவேலு ) ஊட்டிக்கு விரைகிறார். அங்கு வீணா தனது தேனிலவுக்கு வந்துள்ளார். காதலர்கள் இறுதியில் ஒன்றுபடுகிறார்களா என்பது இந்த முக்கோண காதல் கதையின் எஞ்சிய பகுதியாக உள்ளது.

நடிகர்கள்

இசை

படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்தார்.[4]

எண். பாடல் பாடகர்கள் பாடல் வரிகள் நீளம் (மீ: கள்)
1 "அவள் யாராவள்" கார்த்திக் பா. விஜய் 04:30
2 "மணப்பொண்ணு அழகா" திப்பு, ஸ்ரீவர்தினி நா. முத்துக்குமார் 04:41
3 "ஓத்த சொலுதான்" அனந்த ராமன் அறிவுமதி 05:08
4 "சுட்டிப் பயலே" வசுந்தரா தாஸ், திப்பு யுகபாரதி 04:27
5 "தவமின்றி கிடைத்த" சாதனா சர்கம், ஹரிஹரன் தாமரை 05:01
6 "வண்ணம் கலைந்து" கார்த்திக் பழனி பாரதி 05:06

வெளியீடு

படம் சராசரியான விமர்சனங்களைப் பெற்று வெளியானது. ஒரு விமர்சகர் இயக்குனரைக் குறிப்பிட்டு "பழக்கபட்ட கதையாக இருந்தபோதிலும் படம் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது".[5][6] மற்றொரு விமர்சகர் குறிப்பிடும்போது, "அறிமுக்க் கலைஞர்களின் சமீபத்திய திரைப்படங்களில், இது பார்க்க வேண்டிய படம்".[7] இருப்பினும் இந்தப் படம் வணிக ரீதியாக சிறப்பான வசூலை ஈட்டவில்லை.[8]

குறிப்புகள்

  1. "AllIndianSite.com - Anbu - It's All About movie". kollywood.allindiansite.com இம் மூலத்தில் இருந்து 1 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140301190443/http://kollywood.allindiansite.com/anbu_tn.html. 
  2. http://www.sify.com/movies/anbu-review-tamil-pclu0hdfhdjie.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2003-06-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030610144236/http://thehindu.com/thehindu/fr/2003/03/07/stories/2003030701140201.htm. 
  4. "Anbu Songs". mio.to இம் மூலத்தில் இருந்து 2014-09-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140904031223/http://mio.to/album/Anbu+%282003%29. 
  5. "The Hindu : "Anbu"". hindu.com இம் மூலத்தில் இருந்து 2014-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140306123356/http://www.hindu.com/fr/2003/03/07/stories/2003030701140201.htm. 
  6. "Anbu - Tamil Movie Review". thiraipadam.com இம் மூலத்தில் இருந்து 2014-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140305195722/http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=388&user_name=bbalaji&review_lang=english&lang=english. 
  7. HostOnNet.com. "BizHat.com - Anbu Review. Bala, Deepu, Vadivelu, Adithya, Abhinayasri, Vijayakumar". movies.bizhat.com இம் மூலத்தில் இருந்து 2014-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141011032003/http://movies.bizhat.com/review_anbu.php. 
  8. "'Anbu' Bala - smiling at success! - Tamil Movie News". indiaglitz.com இம் மூலத்தில் இருந்து 2014-02-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140225070809/http://www.indiaglitz.com/-anbu-bala--smiling-at-success--tamil-news-13434. 
"https://tamilar.wiki/index.php?title=அன்பு_(2003_திரைப்படம்)&oldid=30342" இருந்து மீள்விக்கப்பட்டது