இராமன் ஸ்ரீராமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இராமன் ஸ்ரீராமன்
இயக்கம்பிரசாத் டி. கே.
தயாரிப்புபாபு கே.
திரைக்கதைபிரசாத் டி. கே.
இசைசிவாஜி ராஜா
நடிப்புவிசயகாந்து
ஜோதி
வனிதா
சத்யராஜ்
ஒளிப்பதிவுரமேஷ்
வெளியீடுஏப்ரல் 14, 1985 (1985-04-14)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இராமன் ஸ்ரீராமன் (Raman Sreeraman) என்பது 1985 ஆம் ஆண்டைய தமிழ் பரபரப்பூட்டும் அதிரடி திரைப்படம் ஆகும். பிரசாத் டி. கே. இயக்கிய இப்படத்தை பாபு கே தயாரித்தார். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் ஜோதி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு சிவாஜி ராஜா இசை அமைத்தார்.[1][2][3]

நடிகர்கள்

கதை

விஜய் ஒரு பிரலபமான தொழிலதிபர். அவரது திருமணத்திற்கு ஒரு நாள் கழித்து, அவரை அவரது மனைவியின் முன்னாள் காதலனான சங்கர் (சத்யராஜ்) வழியில் தடுத்து நிறுத்தி, அவர்களை கிண்டல் செய்யும் முறையில் வாழ்த்துகிறார். விரைவில் சங்கர் வித்யாவை அவ்வப்போது மிரட்டத் (பிளாக் மெயில்) தொடங்குகிறார். வித்யா (ஜோதி) சங்கரின் சகோதரியான சாரதாவின் கல்லூரி காலத் தோழி என்பதால் தோழிக்காக அமைதியாக இருந்தனர். இருப்பினும், விஜய் சங்கர் கூறும் கதைகளை நம்பவில்லை. அவர் தனது மனைவி வித்யாமீது நமிபிக்ககையோடு இருக்கிறார். சங்கர் விஜயின் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். இனி அவர்களுக்கு தொந்தரவு செய்ய மாட்டேன் என்று வித்யாவுக்கு சங்கர் தெரிவிக்கிறார். ஒரு நாள் விஜய் தனது நீதிபதி நண்பருடன் (ஸ்ரீகாந்த்) டென்னிஸ் விளையாடும்போது ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் தனது காசாளர் சங்கரால் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்கிறார். இந்த குற்றச்சாட்டை மறுத்த சங்கர், இந்தக் கொலையை செய்தது விஜய் தான் என்று கூறுகிறார்.

பின்னர் தனது தோழி சாரதாவுக்கு உதவ முடிவு செய்த வித்யா, சிறையில் சங்கரை சந்திக்கிறார். விஜய் தனக்கு வேலை கொடுத்ததிலிருந்து தான் திருந்திவிட்டதாக சங்கர் வித்யாவிடம் கூறுகிறான். இருப்பினும், விஜய் காசாளரைக் கொலை செய்து விட்டு டி.எம்.சி 7979 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர மோட்டார் வாகனத்தில் தப்பிசெ சென்றதைக் கண்டதாக கூறுகிறான். விஜய் ஒரு நல்ல மனிதர் என்று இக் கருத்தை வித்யா ஏற்க்க மறுக்கிறார். வித்யா வீடு திரும்பியதும், விஜய் தனது டி.எம்.சி 7979 பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தைக் காணவில்லை என்று தெரிவிக்கிறார். விரைவில் வித்யாவுக்கு தனது கணவர் விஜை மீது சந்தேகம் தோன்றுகிறது. ஒரு இரவு, விஜய் குடிபோதையில் இருப்பதாகவும், சாரதாவுடன் உறவு வைத்திருப்பதாகவும் காட்டப்பட்டுள்ளது. விஜயை பழிவாங்க சாரதா இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறார். பின்னர், விஜய் குடிபோதையில் இருப்பதாகவும் அவரை அழைதுச் செல்லுமாறு வித்யாவுக்கு விடுதியில் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. இதற்காக வித்யா தங்கும் விடுதியை அடைந்ததும், விஜய் தனது மனைவியுடன் திரும்பிச் சென்றதாக தகவல் கூறப்படுகிறது. இது வித்யாவை மேலும் குழப்புகிறது.

அடுத்து என்ன நடந்தது? விஜய் உண்மையான கொலைகாரனா? அல்லது நல்லராக பாசாங்கு செய்கிறாரா அல்லது கொலை செய்தவர் சங்கரா?

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராமன்_ஸ்ரீராமன்&oldid=30815" இருந்து மீள்விக்கப்பட்டது