கருணாஸ்
கருணாஸ் (பிறப்பு: பெப்ரவரி 21, 1970) தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பெப்ரவரி 21, 1970 ஆம் ஆண்டு பிறந்தார்.[1]
கருணாஸ் | |
---|---|
கருணாஸ் | |
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 19 மே 2016 | |
தொகுதி | திருவாடானை |
முக்குலத்தோர் புலிப்படை, தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2015 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கருணாநிதி பெப்ரவரி 21, 1970 பேராவூரணி, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வாழ்க்கை துணைவர்(கள்) | கிரேஸ் |
பணி | நடிகர், நகைச்சுவையாளர், இசையமைப்பாளர், அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
இவர் "முக்குலத்தோர் புலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் அந்த தேர்தலில் 8,696 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.[2]
திரைத்துறை
- நடிகராக
- இசையமைப்பாளராக
ஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|
2009 | ராஜாதி ராஜா | |
2010 | அம்பாசமுத்திரம் அம்பானி | |
2011 | காசேதான் கடவுளடா |
- பாடகராக
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசை | குறிப்பு |
---|---|---|---|---|
2007 | சென்னை 600028 | "ஜல்சா" (ரிமிஸ்) | யுவன் சங்கர் ராஜா | |
2009 | ராஜாதி ராஜா | "காத்திருக்க" | தனக்குத்தானே | |
2011 | காசேதான் கடவுளடா | "காசேதான்" | தனக்குத்தானே | |
2013 | சந்தமாமா | "கோயம்பேடு சில்க் அக்கா" | சிறீகாந்த் தேவா | பாடல்வரிகளும் |
2013 | ரகளபுரம் | "ஒபாமாவும் இங்கேதான்" | சிறீகாந்த் தேவா |