மகாராஜா (2011 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகாராஜா
இயக்கம்டி. மனோகரன்
தயாரிப்புஜே. ரவி
கதைடி. மனோகரன்
இசைடி. இமான்
நடிப்புசத்யா
அஞ்சலி
நாசர்
சரண்யா
ஒளிப்பதிவுவி. லட்சுமிபதி
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்ஜெயராம் கம்பெனி
வெளியீடு30 திசம்பர் 2011 (2011-12-30)[1][2]
மொழிதமிழ்

மகாராஜா 2011[3] ஆம் ஆண்டு சத்யா, அஞ்சலி மற்றும் நாசர் நடிப்பில், மனோகரன் இயக்கத்தில், டி. இமான் இசையில், ஜே. ரவி தயாரிப்பில், வி. லட்சுமிபதி ஒளிப்பதிவில் மற்றும் பி. சாய் சுரேஷின் படத்தொகுப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[4][5][6][7]

கதைச்சுருக்கம்

மகாதேவன் (நாசர்) நடுத்தர வயதுள்ள அரசு ஊழியர். அவருடைய மனைவி, மகன், தந்தை ஆகியோருடன் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வாழ்பவர். நடுத்தரக் குடும்பங்களுக்கே உரித்தான பொருளாதாரத் திட்டமிடல், எளிமையான வாழ்க்கை முறை, ஆடம்பரமில்லாத உடைகள், வாகனம் மற்றும் வீடு என்ற ஒரு வழமையான, இறுக்கமான வாழ்க்கைமுறை அவருடையது. தனது இந்த ஒரே மாதிரியான வாழ்க்கைமுறையில் சலிப்படையும் அவர் இந்த நெருக்கடியான வாழ்க்கைமுறையை விட்டு, மகிழ்ச்சியானதொரு நவநாகரிக வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புகிறார். அவரது இளவயதில் இருந்ததைப் போன்று தற்போது தனது வாழ்க்கை மாற வேண்டும் என்று உள்ளூர விரும்புகிறார். மேற்கத்திய நாகரிக முறையின் வளர்ச்சியால் இப்போதைய இளைய தலைமுறை அவரது தலைமுறையை விட்டு வெகுதூரம் விலகிநிற்பதாக அவருக்குத் தோன்றுகிறது.

அரவிந்த் (சத்யா) அமெரிக்காவிலிருந்து வரும் நவநாகரிக இளைஞன். அவனுக்கு சென்னையிலுள்ள கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணி கிடைக்கிறது. அரவிந்தை சந்திக்கும் மகாதேவன் அவன் உறவுமுறையில் தனக்கு மருமகன் என்று அறிகிறார். இருவரும் நண்பர்களைப் போல பழகுகிறார்கள். இளைஞர்களைப் போல நவநாகரிக வாழ்க்கை வாழ வேண்டும் என்ற மகாதேவனின் ஆசையை அரவிந்த் நிறைவேற்றுகிறான். அரவிந்திடம் பழகும் மகாதேவனிடம் ஏற்படும் திடீர் மாற்றத்தால் அவர் குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகிறது.

பிரியாவை (அஞ்சலி) சந்திக்கும் அரவிந்த் அவளைக் காதலிக்கிறான். அவளைக் காதலிப்பதால் அவளுக்காக தன்னை மாற்றிக்கொள்ள துவங்குகிறான். சராசரி மனிதர்களின் வாழ்க்கை முறை வழமையான ஒன்றாக இருந்தாலும் அந்த வாழ்க்கையே நிரந்தரமான மகிழ்ச்சியைத் தரும் என்பதைப் புரிந்துகொள்கிறான். தன்னால் மகாதேவனின் குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை தானே சரிசெய்ய முடிவுசெய்கிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

தயாரிப்பு

நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனோகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.[8]

இசை

படத்தின் இசையமைப்பாளர் டி. இமான். பாடலாசிரியர்கள் நா. முத்துக்குமார், பா. விஜய், சினேகன், கிருதியா, யுகபாரதி மற்றும் விவேகா.

வ. எண் பாடல் பாடகர்(கள்)
1 அடிடா டமாரம் டி. இமான், ரோஷினி
2 அரே தம்மாரே அனந்து, நேகா பாசின்
3 ஹலோ நண்பா விஜய் யேசுதாஸ்
4 மெக்ஸி மெக்ஸிகன் லேடி ஹரிஹரன்
5 மை நேம் ஐஸ் ராஜு பேபி பென்னி தயாள், நாசர், ஸ்ரீசரண்
6 ராஜா ராஜா மகாராஜா கார்த்திக், எம். எல். ஆர். கார்த்திகேயன், சோழர் சாய்

மேற்கோள்கள்

  1. "ஒரே நாளில் 13... ஆனால் பொங்கலுக்கு ரெண்டே ரெண்டு!". oneindia இம் மூலத்தில் இருந்து 2012-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120107194832/http://tamil.oneindia.in/movies/specials/2011/12/only-2-films-pongal-aid0136.html. பார்த்த நாள்: 2011-12-28. 
  2. "8 releases on 2011's last Friday". IndiaGlitz இம் மூலத்தில் இருந்து 2012-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120203155823/http://www.indiaglitz.com/channels/tamil/article/76037.html. பார்த்த நாள்: 2011-12-27. 
  3. "2011 திரைப்படங்கள்". https://cinema.dinamalar.com/cinema-news/6081/special-report/2011-Tamil-Cinema-Special-Report.htm. 
  4. "மகாராஜா" இம் மூலத்தில் இருந்து 2012-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120203155823/http://www.indiaglitz.com/channels/tamil/article/76037.html. 
  5. "மகாராஜா" இம் மூலத்தில் இருந்து 2012-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120107194832/http://tamil.oneindia.in/movies/specials/2011/12/only-2-films-pongal-aid0136.html. 
  6. "மகாராஜா" இம் மூலத்தில் இருந்து 2009-05-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090528024005/http://popcorn.oneindia.in/title/1232/maharaja.html. 
  7. "மகாராஜா - அஞ்சலி". https://tamil.filmibeat.com/heroines/29-anjali-dons-glamour-role-maharaja-aid0091.html. 
  8. "இயக்குனர் மனோகரன்". https://www.adrasaka.com/2011/12/blog-post_30.html. 
"https://tamilar.wiki/index.php?title=மகாராஜா_(2011_திரைப்படம்)&oldid=36116" இருந்து மீள்விக்கப்பட்டது