அடடா என்ன அழகு
அடடா என்ன அழகு | |
---|---|
இயக்கம் | டி. எம். ஜெயமுருகன் |
தயாரிப்பு | கௌரி ராமசாமி |
கதை | டி. எம். ஜெயமுருகன் |
இசை | டி. எம். ஜெயமுருகன் ஜீவன் தாமஸ் |
நடிப்பு | ஜெய் ஆகாஷ் நிக்கோல் சரத் பாபு ஆஷிஷ் வித்யார்த்தி கருணாஸ் ஐசுவரியா ரேகா ஆர்த்தி |
ஒளிப்பதிவு | கிச்சாஸ் |
படத்தொகுப்பு | எஸ். சுராஜ்கவி |
கலையகம் | அலிபிரி மூவி புரொடக்சன்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 20, 2009 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அடடா என்ன அழகு 2009 ஆம் ஆண்டு ஜெய் ஆகாஷ் மற்றும் நிக்கோல் நடிப்பில், டி. எம். ஜெயமுருகன் இயக்கம் மற்றும் இசையில், இவருடன் ஜீவன் தாமஸும் இசையமைப்பில் இணைந்து பணிபுரிந்த இத்திரைப்படம், கௌரி ராமசாமியின் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம் ஆகும்[1][1][2][3]. இப்படம் தெலுங்கில் ஆஹா எந்த அந்தம் எனவும், இந்தியில் தும் ஹோ சப்செ எனவும் மொழிமாற்றப்பட்டு வெளியானது[4][5].
கதைச்சுருக்கம்
வாசன் (ஜெய் ஆகாஷ்) மனநல மருத்துவர் வைக்கமின் (சரத் பாபு) மகன். நிஷா (நிக்கோல்) பாதுகாப்புத்துறை அமைச்சர் அலெக்சாண்டரின் மகள். (ஆஷிஷ் வித்யார்த்தி) வாசன் இசையின் மீது ஆர்வமாக இருந்தாலும் தன் தந்தையின் விருப்பத்திற்காக மருத்துவப் படிப்புப் படிக்கிறான். தன் நண்பனிடம் (கருணாஸ்) தன் கல்லூரி வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளைக் கூறுகிறான். நிஷா மருத்துவப்படிப்பின் இறுதியாண்டில் அந்தக் கல்லூரியில் சேர்கிறாள். வாசன் அவளைக் காதலிக்கிறான். நிஷாவும் அவனைக் காதலித்தாலும் இருவருமே தங்கள் காதலித்த தெரிவித்துக்கொள்ளாமல் நண்பர்களாக பழகுகின்றனர்.
பட்டமளிப்பு விழாவில் இருவரும் தங்கப்பதக்கம் பெறுகின்றனர். ஒரு நாள் நிஷாவை சிலர் கடத்த முயற்சிக்கின்றனர். அதில் அவளுக்குத் தலையில் அடிபடுகிறது. இதனால் மனநலம் பாதிக்கப்படும் அவள் வாசனின் தந்தை வைக்கம் நடத்தும் மண்ணால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறாள். அவளுக்குப் பிடித்த பாடல்களைக் கேட்பதன் மூலம் அவளுக்குக் குணமாக வாய்ப்புள்ளது என்று வைக்கம், அவள் தந்தையிடம் கூறுகிறார். வாசன் அவளுக்குப் பிடித்த பாடலைப் பாடி அவளைக் குணப்படுத்துகிறான். தன் மகளைக் குணப்படுத்தியதால் அகம் மகிழும் அலெக்சாண்டர், வாசன் விருப்பப்படுவதைக் கொடுக்கத் தயாராக இருப்பதாக வாக்கு தருகிறார். வாசனும் அவனது பெற்றோர்களும், நிஷாவின் மீது வாசன் கொண்டுள்ளக் காதலைப் பற்றிக்கூறி அவளை வாசனுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கூறுகின்றனர். இந்த வேண்டுகோளை எதிர்பார்க்காத அலெக்சாண்டர் அதிர்ச்சியடைந்து தன் வசதியையும் கௌரவத்தையும் பெரிதாக எண்ணி அவர்களின் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்கிறார். வாசன் நிஷாவைக் கடத்துகிறான். அவனிடமிருந்து நிஷாவை மீட்கும் அலெக்சாண்டர், வாசனை சிறைக்கு அனுப்புகிறார்.
வாசன் - நிஷா திருமணம் பல போராட்டங்களுக்குப் பிறகு அலெக்சாண்டர் சம்மதத்துடன் நடக்கிறது.
நடிகர்கள்
- ஜெய் ஆகாஷ் - வாசன்
- நிக்கோல் - நிஷா
- சரத் பாபு - வைக்கம்
- ஆஷிஷ் வித்யார்த்தி - அலெக்சாண்டர்
- கருணாஸ் - வாசனின் நண்பன்
- ஐசுவரியா - டயானா
- ரேகா - வாசனின் தாய்
- ஆர்த்தி - நிஷாவின் தோழி
- மகாதேவன் - மகாதேவன்
- சத்யப்ரகாஷ்
- ஏ. மதியழகன்
- சிட்டி பாபு - பாதுகாவலர்
- யூனிஸ்டர் மனோகர்
- எல். ஐ. சி. நரசிம்மன்
- கவியன்பன்
- என். சுந்தர்ராஜன்
- பெல்லி - பெல்லி
- ஜாஸ்மின்
- வெண்கல் ராவ்
- ரகுவரன் - சிறப்புத் தோற்றம்
தயாரிப்பு
இப்படத்தில் கதாநாயகனின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ரகுவரன் இறந்து போனதால் அக்கதாபாத்திரத்தில் நடிக்க சரத்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டார்[6][7].
இசை
படத்தின் இசையமைப்பாளர்கள் டி. எம். ஜெயமுருகன் மற்றும் ஜீவன் தாமஸ். பாடலாசிரியர் டி. எம். ஜெயமுருகன்[8][9].
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | அடடா என்ன அழகு | எஸ். பி. பாலசுப்ரமணியம், கோபிகா பூர்ணிமா | 4:47 |
2 | உன்னை எனக்கு | ஹரிஹரன் | 5:05 |
3 | உலக அழகெல்லாம் | சங்கர் மகாதேவன், கார்த்திக் | 4:19 |
4 | கும்மு கும்மு | திப்பு, சுசித்ரா, கல்யாணி | 5:18 |
5 | தீபாவளி | மனோ, ஹரிஷ் ராகவேந்திரா, முகேஷ், கல்யாணி, சைந்தவி, அனுராதா ஸ்ரீராம் | 5:27 |
6 | நிஷா | அஸ்லம் முஸ்தபா | 5:12 |
7 | தீராத | முகேஷ் | 5:27 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "அடடா என்ன அழகு".
- ↑ "அடடா என்ன அழகு".
- ↑ "அடடா என்ன அழகு".
- ↑ "அடடா என்ன அழகு".
- ↑ "அடடா என்ன அழகு".
- ↑ "ரகுவரன் - சரத் பாபு".
- ↑ "ரகுவரன் - சரத் பாபு".
- ↑ "பாடல்கள்". Archived from the original on 2021-10-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-14.
- ↑ "பாடல்கள்".