பாலா சிங்
பாலா சிங் | |
---|---|
பிறப்பு | 7 மே 1952 |
இறப்பு | 27 நவம்பர் 2019[1] | (அகவை 67)
இருப்பிடம் | வடபழனி, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1972–2019 |
சொந்த ஊர் | மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தமிழ்நாடு, இந்தியா |
வாழ்க்கைத் துணை | தங்கலீலா |
பிள்ளைகள் | ஓசின் சிபின் |
பாலா சிங் (Bala Singh, 07 மே 1952 - 27 நவம்பர் 2019)[2] என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு நாசர் நடித்த அவதாரம் என்னும் படத்தில் நடித்ததன் மூலம், தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், அதில் பெரும்பாலான படங்களில் எதிர்நாயகனாகவே நடித்துள்ளார்.[3]
குடும்பம்
இவருக்கு தங்கலீலா என்ற மனைவியும், ஓசின் என்ற மகளும், சிபின் என்ற மகனும் உள்ளனர்.
திரை வாழ்க்கை
பாலா சிங் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் நாசரின் அவதாரம் (1995) படத்தில் நடிப்பதற்கு முன்பு, தேசிய நாடக பள்ளியில், பயிற்சி பெற்றார். இவர் சங்கர், மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இயக்கிய படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் எதிர்நாயகனாகவே நடித்துள்ளார்.[4]
2009 ஆம் ஆண்டில், வண்ணத்துப்பூச்சி என்னும் படத்தில், ஒரு தாத்தாவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இது தாத்தா, பாட்டி மற்றும் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு இடையிலான உறவை ஆராய்ந்த ஒரு திரைப்படமாகும்.
இறப்பு
இவருக்கு 26 நவம்பர், 2019 அன்று மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் சிகிச்சை பலனின்றி 27 நவம்பர், 2019 அன்று உயிரிழந்தார்.
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1983 | மலமுகலிலே தெய்வம் | மலையாள திரைப்படம் | |
1985 | உயரம் நஞ்சன் நடகே | மலையாள திரைப்படம் | |
1987 | ஜங்கிள் பாய் | மலையாள திரைப்படம் | |
1989 | தடவராயிலே ராஜக்கன்மார் | இராமசாமி | மலையாள திரைப்படம் |
1991 | வேண்டும் ஒரு ஆத்யராத்திரி | இராஜன் | மலையாள திரைப்படம் |
1995 | அவதாரம் | பாசி | |
1996 | இந்தியன் | ||
1997 | ராசி | கதிர்வேல் | |
1997 | உல்லாசம் | தாமோதரன் | |
1998 | மறுமலர்ச்சி | காளிங்கராயன் | |
1998 | புதுமைப்பித்தன் | ||
1998 | தினம்தோறும் | ||
1998 | சிம்மராசி | ||
1999 | கெஸ்ட் அவுஸ் | ||
1999 | இரணியன் | ||
1999 | ஆனந்த பூங்காற்றே | ||
1999 | காமா | வெங்கடகிரி | |
2000 | சந்தித்த வேளை | ||
2000 | சுதந்திரம் | ||
2000 | பாரதி | ||
2001 | தீனா | மலர்வண்ணன் | |
2001 | மாயன் | ||
2002 | தயா | அமைச்சர் | |
2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | தேவநாதன் | |
2002 | காமராசு | ||
2002 | இவன் | ||
2002 | சுந்தரா டிராவல்ஸ் | ||
2002 | நண்பா நண்பா | எட்வர்ட்ஸ் | |
2003 | சாமி | ||
2003 | ஒருத்தி | ||
2003 | நள தமயந்தி | செட்டியார் | |
2004 | விருமாண்டி | ராசுகாளை | |
2004 | கேரள அவுஜ் உடன் வில்பானக்கு | சின்ன தேவர் | மலையாள திரைப்படம் |
2004 | உதயா | ராம்ஜி | |
2004 | ஜோர் | ||
2004 | மதுர | ||
2004 | ட்ரீம்ஸ் | ||
2005 | மண்ணின் மைந்தன் | ஜோசப் | |
2005 | கண்ணம்மா | ||
2006 | இலக்கணம் | ||
2006 | திருப்பதி | ||
2006 | நாளை | கோதண்டம் | |
2006 | புதுப்பேட்டை | அன்பு | |
2006 | ரெண்டு | இரத்தினசாமி | |
2007 | முனி | ||
2007 | கிரீடம் | மாசிலாமணி | |
2007 | நான் அவனில்லை | அமைச்சர் | |
2008 | பீமா | ||
2008 | தங்கம் | ||
2008 | அய்யாவழி | ||
2008 | முல்ல | மலையாள திரைப்படம் | |
2008 | பிரிவோம் சந்திப்போம் | முத்தையா | |
2008 | உளியின் ஒசை | பிரம்மராயர் | |
2009 | ஆனந்த தாண்டவம் | ||
2009 | கந்தகோட்டை | ||
2009 | மலையன் | ||
2009 | ஜகன்மோகினி | ||
2009 | வண்ணத்துப்பூச்சி | ||
2009 | வேட்டைக்காரன் | இராஜசேகர் | |
2009 | தலை எழுத்து | பச்சை | |
2010 | மதராசபட்டினம் | துரைசாமி | |
2010 | விருந்தாளி | ரங்கராஜன் | |
2010 | தம்பி அர்ஜூனா | காக்கா | |
2011 | மார்கண்டேயன் | எசக்கி | |
2011 | இளைஞன் | ||
2011 | ஒஸ்தி | ||
2011 | கீழ தெரு கிட்சா | ||
2011 | வர்மம் | ||
2011 | மின்சாரம் | ||
2011 | தம்பி வெட்டோத்தி சுந்தரம் | பரமசிவம் | |
2012 | அம்புலி | ||
2012 | இதயம் திரையரங்கம் | ||
2012 | கிருஷ்ணவேனி பாஞ்சாலி | ||
2012 | மாசி | ||
2012 | இத்தனை நாளா எங்கிருந்தாய் | வெளியாகவில்லை | |
2012 | பொற்கொடி 10ஆம் வகுப்பு | ||
2013 | சென்னையில் ஒரு நாள் | ||
2013 | ஜன்னல் ஓரம் | ||
2013 | வத்திக்குச்சி | ||
2013 | நீளம் | வெளியாகவில்லை | |
2013 | யமுனா | ||
2013 | குண்டெல்லோ கோடாரி | தெலுங்கு திரைப்படம் | |
2013 | மறந்தேன் மன்னித்தேன் | ||
2014 | தெனாலிராமன் | நாகநாதன் | |
2014 | அங்குசம் | ||
2014 | விஞ்ஞானி | ||
2014 | ஜிகர்தண்டா | சந்தானம் | |
2014 | ஒரு ஊர்ல ரெண்டு ராஜா | பிரியாவின் தந்தை | |
2014 | விழி மூடி யோசித்தால் | பாய் | |
2015 | 49-ஓ | தீனதயாளன் | |
2015 | பூலோகம் | ||
2016 | சும்மாவே ஆடுவோம் | ||
2016 | விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் | ||
2016 | பலே வெள்ளையத்தேவா | ||
2017 | எங்கிட்ட மோதாதே | ||
2017 | அட்டு | ||
2017 | குரங்கு பொம்மை | விஜியின் தந்தை | |
2017 | வல்லதேசம் | ||
2018 | தானா சேர்ந்த கூட்டம் | குணசேகரன் | |
2018 | கடிகார மனிதர்கள் | வீட்டு உரிமையாளர் | |
2018 | சாமி 2 (திரைப்படம்) | ஆத்தங்கரை சண்முகம் | |
2019 | சர்வம் தாளமயம் | கோகுல் ராஜ் | |
2019 | நீர்த்திரை | ||
2019 | குடிமகன் | ||
2019 | என். ஜி. கே | அருணகிரி | |
2019 | மகாமுனி | அரசியல்வாதி |
தொலைக்காட்சி
- சூலம் (2002 - 2004)
- ருத்ரவீணை (2003 - 2004)
- நல்ல நேரம் (2013 - 2014)
- ஆதிரா (2015 - 2016)
மேற்கோள்கள்
- ↑ http://www.nadigarsangam.org/member/k-balasingh/
- ↑ "இந்தியன், புதுப்பேட்டை புகழ் நடிகர் பாலா சிங் மறைவு". Archived from the original on 2019-11-29. பார்க்கப்பட்ட நாள் 2019-11-27. தினமணி (நவம்பர் 27, 2019)
- ↑ "Tamil actor Bala Singh passes away". The indian EXPRESS (27 Nov, 2019)
- ↑ "Bala singh, the character actor". Tamilo. Archived from the original on 30 திசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 திசம்பர் 2013.