விடிஞ்சா கல்யாணம்
விடிஞ்சா கல்யாணம் | |
---|---|
இயக்கம் | மணிவண்ணன் |
தயாரிப்பு | திருப்பூர் மணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | சத்யராஜ் ஜெயஸ்ரீ |
வெளியீடு | 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விடிஞ்சா கல்யாணம் 1986-ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
கதை
ஒரு பாசமான தாயும் (சுஜாதா) மகளும் (ஜெயஸ்ரீ) சேர்ந்து இளைஞன் ஒருவனைக் கொன்றுவிடுகிறார்கள். மகளின் மானம் காக்க அந்தக் கொலை நிகழ்கிறது. யாரும் அறியாதவகையில் அந்தச் சடலத்தை ஒரு முகட்டிலிருந்து உருட்டிவிடுகிறார்கள். இது யார் கண்ணிலும் படாது என்று திரும்பிவிடுகிறார்கள். ஆனால் அது சிறையிலிருந்து தப்பி வந்திருக்கும் மரண தண்டனைக் கைதி ஒருவர் (சத்யராஜ்) கண்ணில்பட்டுவிடுகிறது. அந்தக் கைதி நேரடியாக அந்தத் தாயும் மகளும் குடியிருக்கும் வீட்டுக்கு வந்து, அந்தக் கொலையை வெளியில் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி தனது காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அந்தக் கொலையை விசாரிப்பதோ மகளை மணந்துகொள்ள இருக்கும் காதலன். தாயும் மகளும் யாரைக் கொன்றார்கள், அந்தத் தூக்குத் தண்டனைக் கைதி யார், அவருக்கும் தாய், மகளுக்கும் என்ன தொடர்பு போன்றவற்றைத் தெளிபடுத்திச் செல்கிறது திரைக்கதையின் பிற்பகுதி.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார் மற்றும் பாடல்களை வாலி, புலமைப்பித்தன் மற்றும் கங்கை அமரன் இயற்றியுள்ளனர்.