குவா குவா வாத்துகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குவா குவா வாத்துகள்
Vinyl Records Cover
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
சுலக்சனா
பாண்டியன்
இளவரசி
வெளியீடு1984
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குவா குவா வாத்துகள் (Kuva Kuva Vathugal) என்பது 1984 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இத்திரைப்படத்தை பஞ்சு அருணாசலம் தயாரித்திருந்தார். இப்படத்தில் சிவகுமார், சுலக்சனா, பாண்டியன் மற்றும் இளவரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1] 1984 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று திரைப்படம் வெளியிடப்பட்டது.[2]

நடிகர்கள்

பணியாளர்கள்

  • உடைகள் - ஜி.ஏ. கிருஷ்ணன், நயீம் (சிவகுமார்), இராசேந்திரன் (மோகன்) (உதவி: எம். பாபு-பால்ராசு)
  • ஒப்பனை: ஆர். சுந்தரமூர்த்தி, எம். சேதுபதி (சிவகுமார்), சாந்தாராம் (தேங்காய்), மணி (சுலக்சனா) (உதவி: மோகன், ராசேந்திரன், நாகேசுவர ராவ்)
  • படப்பிடிப்பகம்: வாகினி-சாரதா
  • வெளிப்புற படப்படிப்பு அலகு: துர்கா வெளிப்புற படப்பிடிப்பகம்
  • தயாரிப்பு நிறுவனம் - பஞ்சு திரைப்பட நிறுவனம்

பாடல்கள்

திரைப்படத்திற்கு இளையராசா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் பஞ்சு அருணாசலம் இயற்றினார்.[4]

வ.எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1 நினச்சேன் நினச்சேன் வாணி ஜெயராம் பஞ்சு அருணாசலம்
2 பாயும் புலி எஸ். ஜானகி
3 பொல்லாத ஆசை எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்
4 தேனில் வடித்த சிலையே கிருட்டிணசந்தர், எஸ். ஜானகி

விமர்சனம்

நட்சத்திர நடிகர்களின் நடிப்பு, மணிவண்ணனின் இயக்கம், அருணாசலத்தின் வசனங்கள், இளையராசாவின் இசை மற்றும் சபாபதியின் ஒளிப்பதிவு ஆகியவற்றை கல்கியின் செயமன்மதன் பாராட்டினார்.[5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குவா_குவா_வாத்துகள்&oldid=32483" இருந்து மீள்விக்கப்பட்டது