அவிநாசி கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அவிநாசி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
அவிநாசி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் is located in தமிழ் நாடு
அவிநாசி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
அவிநாசி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
கரிவரதராஜ பெருமாள் கோயில், அவிநாசி, திருப்பூர், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:11°11′20″N 77°16′08″E / 11.1890°N 77.2688°E / 11.1890; 77.2688
பெயர்
பெயர்:அவிநாசி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:அவிநாசி
மாவட்டம்:திருப்பூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கரிவரதராஜ பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள்
தொலைபேசி எண்:9443757828, 04296 273113[1]

அவிநாசி கரிவரதராஜ பெருமாள் திருக்கோயில் என்பது அவிநாசியில் அமைந்துள்ள பழைமையான ஒரு பெருமாள் கோயில் ஆகும். இத்திருக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில் சமீபத்திலேயே அமைந்துள்ளது.

வரலாறு

16-ஆம் நூற்றாண்டில் அவிநாசியில் வசித்திருந்த வெள்ளைத்தம்பிரான் என்ற சித்தர் அன்ன ஆகாரமின்றி நல்லாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து தவமிருந்து வந்தார். தவநிலை கலைந்த சமயங்களில் துன்பங்களில் வருந்தும் மக்களுக்கு நன்மை செய்து வந்தார். [1]

அவினாசி அவிநாசியப்பரின் தேர்த்திருவிழா சமயம் இவரது மடத்தின் அருகில் தேர் அசையாமல் நின்றுவிட தமது தவசக்தியால் தேரை நகர்த்தினார். [1]

இத்தகைய பெருமை பெற்ற இவரது கனவில் வந்த பெருமாள் பூமிக்கு அடியில் இருக்கும் தம்மை எடுத்து அவரது திருமடத்தில் பிரதிஷ்டை செய்யச் சொல்லவே, மக்களிடம் தாம் கண்ட கனவைக் கூறி குறிப்பிட்ட இடத்தில் பூமியைத் தேடினர். அங்கிருந்து பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவித் தாயார்கள், சக்கரத்தாழ்வார் விக்கிரகமும் கிடைத்தன. முறைப்படி கோயில் நிர்மாணித்தார் வெள்ளைத்தம்பிரான். [1]

தீபஸ்தம்பம்

இத்திருக்கோயிலின் தீபஸ்தம்பம் சிறப்பு வாய்ந்தது. தீபஸ்தம்பத்தில் சங்கின் மீது திரு நரசிம்மரின் பீஜாட்சர மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தீபஸ்தம்பத்திற்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு என்று கூறப்படுகின்றது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 குமுதம் ஜோதிடம்; 6.9.2013;

வெளி இணைப்புகள்