வைட்டிலா - 6
| வைட்டிலா - 6 VTL 6 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| செருவிரிப்பு X IR5 X ஜெயா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| மகசூல் |
| எக்டருக்கு 4,500 கிலோ |
| வெளியீடு |
| 2004[1] |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
வைட்டிலா - 6 (VTL 6) எனப்படும் இந்த நெல் வகை, ஆரம்ப கலப்பினமாக செருவிரிப்பு மற்றும் IR 5 க்கு இடையில் இணைக்கப்பட்டு, பின்னர் அவற்றின் F1 தலைமுறையான ஜெயா நெல்லுடன் கலப்பினப்படுத்தப்பட்ட கேரளாவின் ஒரு புதிய நெல் இரகமாகும்.[2] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS), இந்த நெல் இரகத்தை வெளியிடபட்டதாக அறியப்படுகிறது. நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 110 - 115 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர தடித்த சிவப்பு நிறமாகும். உப்புத்தன்மை, அமிலத்தன்மை மற்றும் நீரில் மூழ்கும் தன்மைகளை தாங்கும் திறன் கொண்ட இந்நெல் இரகம், கடலோர உப்புப் பகுதிகளில் விரிப்பு பருவத்திற்கு பயிரிட ஏற்றது என கூறப்படுகிறது.[3]
உள்ளூர், பிராந்தியம் மற்றும் தேசிய மட்டங்களில் நம்பிக்கைக்குரிய பயிர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், கேரளாவின் முதல் உப்புத்தன்மையில் சகிப்புத்தன்மை கொண்ட, அரை உயரமான, அதிக விளைச்சல் தரும் நெல் வகையான வைட்டிலா - 6, அக்டோபர் 2004 இல் கேரளாவின் கடலோர உப்புப் பகுதிகளின் சாகுபடிக்காக வெளியிடப்பட்டது. மேலும் இந்நெல் இரகம், இரசாயன உரங்கள் மற்றும் தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் இல்லாமல் நெருக்கமான நடவு மூலம் சராசரி மகசூல், எக்டருக்கு 4,500 கிலோ ஆகும்.[4]
சான்றுகள்
- ↑ List of Notified Varieties - Page 23
- ↑ VTL 6: a semi-tall, non-lodging, and high yielding rice (Oryza sativa L.) variety for the coastal saline zones of Kerala.
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-12.
- ↑ "VTL 6: A semi-tall, non-lodging, and high yielding rice (Oryza sativa L.) variety for the coastal saline zones of Kerala". jtropag.kau.in (ஆங்கிலம்) - 08-01-2007. Retrieved 2025-10-12.