வைட்டிலா - 1

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வைட்டிலா - 1
VTL 1
வேளாண் பெயர்
உயரமான சூட்டுப் பொக்காலி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

வைட்டிலா - 1 (VTL 1), வேளாண் பெயர்; உயரமான சூட்டுப் பொக்காலி (Chootupokkali-Tall), எனப்படும் இந்த நெல் வகை, கேரளாவின் ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS),[2] வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக உயரமான சூட்டுப் பொக்காலி எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]

பின்னணி

பொக்காலி எனப்படும் உப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நெல் வகையான இது, உப்புத்தன்மை வாய்ந்த நிலப் பகுதிகளுக்கு ஏற்றது. நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 - 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[1][4]

சான்றுகள்

  1. 1.0 1.1 "Paddy varieties of Kerala - Medium duration varieties - Vyttila-1 (Chootupokkali-Tall)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-09.
  2. Rice Research Station, Vyttila
  3. "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-09.
  4. "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-09.
"https://tamilar.wiki/w/index.php?title=வைட்டிலா_-_1&oldid=504787" இலிருந்து மீள்விக்கப்பட்டது