வைகை அணை - 1

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வைகை அணை - 1
VGD 1
வேளாண் பெயர்
VGD 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ADT 43 X சீரகச் சம்பா
வகை
புதிய நெல் வகை
காலம்
129 நாட்கள்
மகசூல்
5,859 கிலோ / எக்டேர்
வெளியீடு
திசம்பர் 17, 2018
வெளியீட்டு நிறுவனம்
TNAU, வேளாண் ஆராய்ச்சி நிலையம்,வைகை அணை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
படிமம்:Flag of India.svg இந்தியா

வைகை அணை - 1 (நெல்) (VGD 1), சுட்டுப்பெயர்: (VG 09006), முன்மொழிவு எண்: (IET 24606) எனப்படும் இந்த நெல் வகை, ஆடுதுறை - 43 மற்றும் சீரகச் சம்பா ஆகிய நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட இது, தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

காலம்

நடுத்தர கால வகை நெற்பயிர்களில் ஒன்றான இது, 129 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற நடுத்தர கால நெற்பயிர்கள், சம்பா மற்றும் பின் சம்பா போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் அரை குள்ள, நிமிர்ந்த, சாய்வு இல்லாத தாவரத் தன்மை கொண்டதாக உள்ள இது, சீரகசாம்பாவைப் போன்ற மெல்லிய கூல வகையைக் கொண்டுள்ளது.[1]

சாகுபடி

தமிழகத்தின் ஈரோடு, கரூர், கோவை, தர்மபுரி திருச்சி, திண்டுக்கல், தேனி, பெரம்பலூர், மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில், சம்பா மற்றும் பின் சம்பா பருவங்களில் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]

வெளியீடு

பல்கலைக்கழக வகை மற்றும் தொழில்நுட்ப வெளியீட்டுத் திரையிடல் குழு (UVTSRC), கோயம்புத்தூர், TNAU, திசம்பர் 17, 2018 அன்று மாநில வகை வெளியீட்டுக் குழுவிற்கு சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்பட்ட இந்நெல் இரகத்தை, வைகை அணை வேளாண் ஆராய்ச்சி நிலையம், வெளியிட்டதாக அறியப்படுகிறது.[2]

மகசூல்

இலை சுருக்கம், குலைநோய் மற்றும் பழுப்பு நிற புள்ளிகளுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இதன் சராசரி தானிய மகசூல் ஒரு எக்டேருக்கு 5,859 கிலோ ஆகும், மேலும் சீரகச் சம்பா மற்றும் திருக்குப்பம் - 13 நெல் இரகங்களை விட, முறையே 32.56 மற்றும் 13.80 சதவீதம் அதிகமாகும். இந்த வகையின் சாத்தியமான மகசூல் எக்டேருக்கு 9,500 கிலோ ஆகும் என கூறப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 "Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்). 2025. Retrieved 2025-10-22.
  2. 2.0 2.1 2.2 "Salient features of rice culture VG 09006 as Rice VGD 1" (PDF). www.agritech.tnau.ac.in (ஆங்கிலம்). 2025. Retrieved 2025-10-22.
"https://tamilar.wiki/w/index.php?title=வைகை_அணை_-_1&oldid=504696" இலிருந்து மீள்விக்கப்பட்டது