ராபர்ட் (நடன இயக்குநர்)
ராபர்ட் | |
---|---|
பிறப்பு | 26 சனவரி 1981 தமிழ்நாடு, சென்னை |
தேசியம் | இந்தியர் |
பணி | நடன அமைப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1990–தற்போது வரை |
ராபர்ட் என்பவர் ஒரு இந்திய நடன இயக்குனர் ஆவார். இவர் இந்தியாவின் பல மொழிகளில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் திரைப்பட நடிகராகவும் உள்ளார். இவர் பெரும்பாலும் எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார் அல்லது இவர் நடனம் அமைத்த பாடல்களில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றியுள்ளார்.
தொழில்
ராபர்ட் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். குறிப்பாக மம்முட்டியின் மகனாக அழகனில் (1991) நடித்தார். ராபர்ட் பின்னர் சத்யராஜின் மாறன் (2002) படத்திலும், 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான டான்சர் ஆகியவற்றில் எதிர்மறை பாத்திரத்தில் நடித்தார். டான்சர் படமானது ஒரு ஊனமுற்ற மாணவரின் நடனக் கலைஞராக சாதிப்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டது. அப்படத்தில் எதிர்மறையான பாத்திரங்களை ஏற்று நடித்த ராபர்ட்டின் நடிப்பானது விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, மேலும் அந்த ஆண்டின் பிற்பகுதியில் சிறந்த எதிர்மறை பாத்திரத்திர நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதைப் பெற்றார்.[1] அந்த காலகட்டத்தில், இவர் பவளக்கொடி (2003) இல் நடித்தார், விமர்சகர்கள் இவரது நடிப்பை விமர்சித்தனர், ராபர்ட் "உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிரமப்படுகிறார் மேலும் வேடிக்கையான உரையாடல்கள் கூட அவரது பேசும் முறையினால் அவற்றுக்கான விளைவ் ஏற்படவில்லை" என்று குறிப்பிட்டனர்.[2]
போடா போடி (2012) இல் பணியாற்றியதற்காக ராபர்ட் சிறந்த நடன இயக்குனருக்கான விஜய் விருதை வென்றார். அதில் இவர் "லவ் பண்ணலாமா?" காணொளியில் ஒரு சிறிய பகுதியில் தோன்றினார். .[3]
மொட்ட சிவா கெட்ட சிவா (2017) திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னர், நடிகர் டிங்கு, அவரும் ராபர்ட்டும் தாத்தா காரை தொடாதே என்ற பெயரில் தயாரிக்கும் படத்திலிருந்து "ஹரா ஹரா மகாதேவாகி" என்ற பாடலை இசையமைப்பாளர் அம்ரேஷ் கணேஷ் திருடியதாக குற்றம் சாட்டும் காணொளியை வெளியிட்டார். 2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாடலை உருவாக்க அம்ரேசுடன் இணைந்து பணியாற்றியதாக டிங்கு குறிப்பிட்டார். ஆனால் தயாரிப்பு சிக்கல்களால் படத்தயாரிப்பு நின்றுவிட்டதால், அம்ரேஷ் இந்த பாடலை வேறு படத்துக்கு பயன்படுத்திவிட்டார் என்றார். 2017 பெப்ரவரியில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அம்ரேஷ் கணேஷ் அந்தக் கூற்றுக்களை மறுத்தார்.[4][5][6]
தனிப்பட்ட வாழ்க்கை
ராபர்ட்டின் அக்காள் அல்போன்சாவும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படவியல்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
1991 | அழகன் | அழகப்பனின் மகன் | குழந்தை நட்சத்திரம் |
1996 | தமிழ்ச் செல்வன் | "உன்னல் முடியம்" பாடலில் ஆடியுள்ளார் | |
1996 | காதல் தேசம் | "கல்லூரி சாலை" பாடலில் ஆடியுள்ளார் | |
1996 | மன்னவா | "யம்மா யம்மா" பாடலில் ஆடியுள்ளார் | |
1997 | காலமெல்லாம் காத்திருப்பேன் | "அஞ்சாம் நம்பர்" பாடலில் ஆடியுள்ளளார் | |
1997 | சக்தி | "மானாமதுரை பொண்ணு" பாடலில் ஆடியுள்ளளார் | |
1997 | ராசி | "என்னாச்சி தங்கச்சி" பாடலில் ஆடியுள்ளளார் | |
1997 | லவ் டுடே | "என்ன அழகு" பாடலில் ஆடியுள்ளளார் | |
1997 | ஒன்ஸ்மோர் | "ஊட்டி மலை பியூட்டி" பாடலில் ஆடியுள்ளளார் | |
1997 | காலமெல்லாம் காதல் வாழ்க | "பாபிலோனா" பாடலில் ஆடியுள்ளளார் | |
1998 | ஜாலி | "செம ஜாலி" பாடலில் ஆடியுள்ளளார் | |
1998 | உன்னுடன் | "பாலாறு இது பதினாறு" பாடலில் ஆடியுள்ளளார் | |
1999 | கண்ணோடு காண்பதெல்லாம் | "இருபது வயது வரை" பாடலில் ஆடியுள்ளளார் | |
2000 | பிரியமானவளே | "வெல்கம் பாய்ஸ்" பாடலில் ஆடியுள்ளளார் | |
2000 | நரசிம்மம் | "பழனிமலை" பாடலில் ஆடியுள்ளளார் | |
2002 | மாறன் | சிவதாஸ் | |
2003 | பவளக்கொடி | Robert | |
2004 | ஜெய் | மோகன் | |
2004 | குத்து | அவராகவே | "போட்டுத்தாக்கு" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2005 | டான்சர் | அருண் | சிறந்த எதிர்மறை நடிகருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது |
2007 | பிறகு | அவராகவே | "பதினோருபேரு ஆட்டம் அதைப் பார்க்க ரசிகர் கூட்டம்" பாடலில் சிறப்புத் தோற்றம்[7] |
2007 | வரலாறு | அவராகவே | "இளமை" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2008 | சிலம்பாட்டம் | அவராகவே | "நலம்தானா" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2010 | சுறா | அவராகவே | "நான் நடந்தால் அதிரடி" பாடலில் சிறப்புத் தோற்றம்[8] |
2011 | ஒஸ்தி | அவராகவே | "நெடுவாளி" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2012 | போடா போடி | அவராகவே | "லவ் பண்ணலாம்" பாடலில் சிறப்புத் தோற்றம் Vijay Award for best choreographer |
2013 | கண்ணா லட்டு தின்ன ஆசையா | அவராகவே | "ஆசையே அலைபோலே" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2013 | மூன்று பேர் மூன்று காதல் | "படபடக்குது மனமே" பாடலில் சிறப்புத் தோற்றம்[9] | |
2013 | வணக்கம் சென்னை | "சென்னை சிட்டி கேங்ஸ்டர்" பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2014 | நேர் எதிர் | சிறப்புத் தோற்றம் | |
2014 | ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | "ஒண்ணுண்னா ரெண்டு" பாடலில் சிறப்புத் தோற்றம்[10] | |
2014 | எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் | பட்டு | இயக்குநரும் |
2017 | அன்பானவன் அசராதவன் அடங்காதவன் | "ரத்தம் என் ரத்தம்" பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2018 | நாகேஷ் திரையரங்கம் | "வாடி வாடி" பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2018 | ஒண்டிக்கு ஒண்டி | ஜோ | |
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் | "ரெட் கார்டு" பாடலில் சிறப்புத் தோற்றம் | |
2020 | அல்டி |
குறிப்புகள்
- ↑ "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers - IndiaGlitz Tamil" இம் மூலத்தில் இருந்து 2004-10-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041025004312/http://www.indiaglitz.com/channels/tamil/review/7252.html.
- ↑ "Pavalakodi - Tamil Movie Review" இம் மூலத்தில் இருந்து 2018-10-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181014130208/http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=385&user_name=bbalaji&review_lang=english&lang=english.
- ↑ "News: India News, Latest Bollywood News, Sports News, Business & Political News, National & International News - Times of India" இம் மூலத்தில் இருந்து 2013-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130616080033/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-13/news-interviews/39227707_1_chevalier-sivaji-award-best-film-vijay-awards.
- ↑ Tamil Star (2 February 2017). "Music Director Amresh Ganesh Press Meet". https://www.youtube.com/watch?v=cJzSZsrfrRs.
- ↑ "Amresh Ganesh clears the air on MSKS controversy". 3 February 2017. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/030217/amresh-ganesh-clears-the-air-on-msks-controversy.html.
- ↑ "Motta Shiva Ketta Shiva music director Amresh Ganesh talks at a press meet". 2 February 2017. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/motta-shiva-ketta-shiva-music-director-amresh-ganesh-talks-at-a-press-meet.html.
- ↑ "YouTube". https://www.youtube.com/watch?v=9VIiSrDAMBo.
- ↑ SonyMusicSouthVEVO (9 January 2015). "Suraa - Naan Nadandhal Adhiradi Video - Mani Sharma". https://www.youtube.com/watch?v=xIeJxN30qkw.
- ↑ rblaaze (7 May 2013). "BlaaZe & Yuvan - Padapadakuthe Manamae (HD)". https://www.youtube.com/watch?v=C6H0aPqy9NI.
- ↑ Saregama Tamil (25 August 2014). "Aindhaam Thalaimurai Sidha Vaidhiya Sigamani - Onnunna Rendu song". https://www.youtube.com/watch?v=DmAJJAxyEg8.