ரணில் விக்கிரமசிங்க
ரணில் விக்கிரமசிங்க රනිල් වික්රමසිංහ Ranil Wickremesinghe | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கையின் 9-வது சனாதிபதி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியேற்பு 21 சூலை 2022 பதில்: 15 சூலை 2022 – 20 சூலை 2022 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | தினேஷ் குணவர்தன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | கோட்டாபய ராஜபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கைப் பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 12 மே 2022 – 21 சூலை 2022 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மகிந்த ராசபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | தினேஷ் குணவர்தன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 9 சனவரி 2015 – 21 நவம்பர் 2019 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன கோட்டாபய ராஜபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | தி. மு. ஜயரத்ன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | மகிந்த ராசபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 9 திசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | மகிந்த ராசபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 7 மே 1993 – 18 ஆகத்து 1994 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | டி. பி. விஜயதுங்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | டி. பி. விஜயதுங்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
10-வது எதிர்க்கட்சித் தலைவர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 22 ஏப்ரல் 2004 – 9 சனவரி 2015 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மகிந்த ராசபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | மகிந்த ராசபக்ச இரத்தினசிறி விக்கிரமநாயக்க தி. மு. ஜயரத்ன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மகிந்த ராசபக்ச | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | நிமல் சிரிபால டி சில்வா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 28 அக்டோபர் 1994 – 10 அக்டோபர் 2001 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிரதமர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா இரத்தினசிறி விக்கிரமநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | காமினி திசாநாயக்கா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | இரத்தினசிறி விக்கிரமநாயக்க | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 23 சூன் 2021 – 21 சூலை 2022 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | வஜிர அபேவர்தன | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 1994–2020 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும்பான்மை | 500,566 (17 ஆகத்து 2015 தேர்தல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 9 மார்ச் 1989 – 19 ஆகத்து 1994 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும்பான்மை | 86,477 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பியகமை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 21 சூலை 1977 – 15 பெப்ரவரி 1989 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | புதிய தொகுதி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்வந்தவர் | தொகுதி நீக்கம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெரும்பான்மை | 22,045 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | ரணில் விக்கிரமசிங்க 24 மார்ச்சு 1949 கொழும்பு, இலங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இலங்கையர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்க்கை துணைவர்(கள்) | மைத்திரி விக்கிரமசிங்க (தி. 1994)
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பெற்றோர் |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இருப்பிடம் | 115 ஐந்தாம் ஒழுங்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படித்த கல்வி நிறுவனங்கள் | இலங்கைப் பல்கலைக்கழகம், இலங்கை சட்டக் கல்லூரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொழில் | வழக்கறிஞர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இணையம் | அதிகாரபூர்வ இணையதளம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஏனைய பதவிகள்
|
ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe, රනිල් වික්රමසිංහ, பிறப்பு: 24 மார்ச் 1949) இலங்கை அரசியல்வாதியும், 8-ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவரும் ஆவார். இவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து 2022 சூலை 21 இல் அரசுத்தலைவரானார்.[1][2] இவர் இவர் 1994 முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், 1993-1994, 2001-2004, 2015-2018, 2018-2019, 2022 காலப்பகுதிகளில் ஐந்து தடவைகள் பிரதமராகவும், 1994-2001, 2004-2015 காலப்பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.[3]
காமினி திசாநாயக்கா 1994 அரசுத்தலைவர் தேர்தல் பரப்புரைக் காலத்தில் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] 1993 முதல் 1994 வரையும், பின்னர் 2001 முதல் 2004 வரையும் பிரதமராகப் பதவியில் இருந்தார். 2015 சனவரி 8 இல், விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இலங்கையின் 21-வது பிரதமராக நியமிக்கப்பட்டார்.[5] 1999-இல் சந்திரிகா பண்டாரநாயக்காவிடமும், 2005-இல் மகிந்த ராசபக்சவிடமும் அரசுத்தலைவர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
விக்கிரமசிங்கவின் அரசியல் கூட்டணியான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 113 என்ற அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிடினும், இலங்கை சுதந்திரக் கட்சியின் 35 உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலமும், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சி அமைத்தார்.[6][7] 2018 அக்டோபர் 26 இல் விக்கிரமசிங்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனை விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது எனக் கூறி பதவி விலக மறுத்தார். இதனை அடுத்து, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது. விக்கிரமசிங்கவைப் பதவி விலக்கியது அரசியலமைப்புக்கு முரணானது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 2018 திசம்பர் 16 இல் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. 2019 அரசுத் தலைவர் தேர்தலில் கோத்தாபய ராசபக்ச பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து, விக்கிரமசிங்க 2019 நவம்பர் 20 இல் பிரதமர் பதவியைத் துறந்தார்.[8] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், இவரது கட்சியில் இருந்து எவரும் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[9] இருப்பினும், கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனம் மூலம் இவர் 2021 சூன் 23 அன்று நாடாளுமன்றம் சென்றார்.[10]
2022 இல் நாட்டில் இடம்பெற்ற பெரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து மேற்கொள்ளப்பட்ட ராசபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களின் விளவாக மகிந்த ராசபக்ச 2022 மே 9 இல் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 2022 மே 12 அன்று ரணில் விக்கிரமசிங்கவை அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச பிரதமராக நியமித்தார்.[11][12] 2022 சூலை 9 அன்று சனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. கோட்டாபய ராசபக்ச தலைமறைவானார். அன்றிரவு கொள்ளுப்பிட்டியில் உள்ள விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது.[13][14] 2022 சூலை 13 இல் கோட்டாபய ராசபக்ச நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து அவர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் அரசுத்தலைவராக நியமித்தார்.[15]
2022 சூலை 14 அன்று கோட்டாபய ராஜபக்ச தனது அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, பிரதமராகப் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க சூலை 15 இல் பதில் அரசுத்தலைவரானார். 2022 சூலை 20 இல், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று 8-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டளஸ் அளகப்பெரும 82 வாக்குகள் பெற்றார்.[16]
தொடக்க வாழ்க்கையும் கல்வியும்
ரணில் 1949 மார்ச் 24 இல் எசுமண்ட் விக்கிரமசிங்க, நளினி விக்கிரமசிங்க (விஜேவர்தன) ஆகியோருக்கு கொழும்பில் பிறந்தார். வழக்கறிஞரான தந்தை,[17] ஏரிக்கரை பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவரது பாட்டனார்கள் சிரில் விக்கிரமசிங்க, டி. ஆர். விஜயவர்தனா ஆகியோர் ஆவர். ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் கல்வி கற்றவர்களில் அனுரா பண்டாரநாயக்கா, தினேஷ் குணவர்தன குறிப்பிடத்தக்கவர்கள். பாடசாலைக் கல்வியை முடித்து, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து சட்டத்தில் பட்டம் பெற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்ந்து 1972 இல் வழக்கறிஞரானார்.[18] 2017 இல் பொருளாதாரம், கல்வி, மனித உரிமைகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக விக்கிரமசிங்கவிற்கு ஆத்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகம் ரணிலுக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கியது.[19]
அரசியல் வாழ்க்கை
ரணில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து, 1970களின் நடுப்பகுதியில் களனி தொகுதிக்கான கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளரானார். பின்னர் பியகமை தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு, 1977 தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். ஜே. ஆர். ஜெயவர்தனாவின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான துணை அமைச்சராகவும், பின்னர் இளைஞர் விவகார, வேலைவாய்ப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இலங்கையின் வயதில் குறைந்த அமைச்சர் என்ற பெயரையும் இதன் மூலம் பெற்றுக் கொண்டார்.[20] 1989 பெப்ரவரியில் ரணசிங்க பிரேமதாசாவின் அமைச்சரவையில் தொழிற்றுரை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் ரணில் பியகமை சிறப்புப் பொருளாதார வலயத்தை உருவாக்கினார்.[21] 1990-இல்லறிவியல், தொழிநுட்பத்துக்கான அமைச்சுப் பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டது. அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்குப் போட்டியாக கட்சியில் செயற்பட்ட லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா ஆகிய மூத்த அரசியல்வாதிகளிடம் இருந்து ரணிலுக்கும் போட்டி இருந்து வந்தது.[22]
1988-1990 காலப்பகுதியில், ஜேவிபியின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை அடக்குவதற்கான அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொழும்பிற்கு வெளியே பட்டலந்த குடியிருப்பு மற்றும் கைத்தொழில் வளாகத்தில் இருந்த சட்டவிரோத தடுப்பு முகாம் ஒன்றின் பின்னணியில் அப்போது அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இருந்துள்ளார் என்று மக்கள் கூட்டணி அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்டது.[23][24] சந்திரிகா குமாரதுங்கவின் மக்கள் கூட்டணி அரசாங்கம், பட்டலந்த முகாமின் நடவடிக்கைகளை விசாரிப்பதற்காக சிறப்பு சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தது. 1997 செப்டெம்பர் 3 அன்று விக்கிரமசிங்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார்.[25][26] ஆணைக்குழுவின் அறிக்கை 1998 ஏப்ரல் 12 அன்று வெளியிடப்பட்டது.[27] ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, "பட்டலந்தா வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளில் சட்டவிரோத சித்திரவதை அறைகளைப் பராமரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மூத்த காவல்துறை அதிகாரி நளின் டெல்கொடவுக்கும் மறைமுகப் பொறுப்பு" இருந்ததாகக் கூறப்பட்டது.[28][29] அத்துடன், "வீட்டு வளாகத்தில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் அங்கீகரிக்கப்படாத கூட்டங்களை நடத்தினார் நடத்தினார், அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்" என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இக்குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.[23]
பிரதமராக பதவி ஏற்பு
மகிந்த ராசபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரசிங்கேவை 12 மே 2022 அன்று இலங்கை பிரதமராக நியமித்தார்.[30]
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Sri Lanka PM Wickremesinghe sworn in as acting president - govt official
- ↑ PTI / Updated: Jul 13, 2022, 14:06 IST. "Ranil Wickremesinghe sworn in as Sri Lanka's interim president". The Telegraph India. https://www.telegraphindia.com/world/ranil-wickremesinghe-sworn-in-as-sri-lankas-interim-president/cid/1874835. பார்த்த நாள்: 2022-07-15.
- ↑ "Ranil Wickremesinghe appointed Prime Minister". Trade Bridge Consultants இம் மூலத்தில் இருந்து 20 ஜூலை 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180720022950/http://tradebridgeconsultants.com/news/elections/ranil-wickremesinghe-appointed-prime-minister/. பார்த்த நாள்: 21 August 2015.
- ↑ "Ranil Wickremesinghe – Gentlemen Politician of 4 decades, alias mature leader of the people". United National Party இம் மூலத்தில் இருந்து 20 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150720004514/http://www.unp.lk/index.php/leader/277-ranil-wickramasinghe. பார்த்த நாள்: 21 August 2015.
- ↑ "Sri Lanka election: shock as president Mahinda Rajapaksa concedes defeat". The Guardian. 9 January 2015. https://www.theguardian.com/world/2015/jan/09/sri-lanka-election-shock-as-president-mahinda-rajapaksa-concedes-defeat. பார்த்த நாள்: 21 August 2015.
- ↑ Ramachandran, Sudha (13 August 2015). "Sri Lanka's Elections: Rajapaksa Tries a Comeback". The Diplomat. http://thediplomat.com/2015/08/sri-lankas-elections-rajapaksa-tries-a-comeback/. பார்த்த நாள்: 21 August 2015.
- ↑ "Prime Minister Wickremesinghe Calls For Buddhist Approach: Nikkei". AsiaMirror cloned Nikkei. 20 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 ஆகஸ்ட் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150820175453/http://www.asianmirror.lk/news/item/11041-prime-minister-wickremesinghe-calls-for-buddhist-approach-nikkei. பார்த்த நாள்: 21 August 2015.
- ↑ Nathaniel, Amali Mallawaarachchi and Camelia. "Ranil resigns, Mahinda takes oaths as PM today" (in en). http://www.dailynews.lk/2019/11/21/local/203448/ranil-resigns-mahinda-takes-oaths-pm-today.
- ↑ Nathaniel, Amali Mallawaarachchi and Camelia. "Ranil resigns, Mahinda takes oaths as PM today" (in en) இம் மூலத்தில் இருந்து 21 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191121080308/http://www.dailynews.lk/2019/11/21/local/203448/ranil-resigns-mahinda-takes-oaths-pm-today.
- ↑ முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எம்.பி.யானார், தினகரன், சூன் 23, 2021
- ↑ "RANIL SWORN IN AS PM". https://www.dailymirror.lk/top_story/RANIL-SWORN-IN-AS-PM/155-236884.
- ↑ Ranil sworn in as PM, டெய்லி நியூசு, மே 13, 2022
- ↑ "PM says he is willing to resign – Latest News | Daily Mirror" (in English). https://www.dailymirror.lk/latest_news/PM-says-he-is-willing-to-resign/342-240727.
- ↑ Press, The Associated (9 July 2022). "Sri Lanka protesters set the prime minister's home on fire after he agrees to resign" (in en). NPR. https://www.npr.org/2022/07/09/1110663578/sri-lanka-protest-president-residence-economic-crisis.
- ↑ https://timesofindia.indiatimes.com/world/south-asia/sri-lankan-pm-ranil-wickremesinghe-appointed-as-acting-president-speaker/articleshow/92848263.cms
- ↑ "Sri Lankan parliament elects six-time PM Wickremesinghe as new president". 20 July 2022. https://www.france24.com/en/live-news/20220720-%F0%9F%94%B4-sri-lankan-parliament-elects-six-time-pm-wickremesinghe-as-new-president.
- ↑ "Regi Siriwardena dies at 82". ancestry.com இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924125456/http://www.rootsweb.ancestry.com/~lkawgw/rsiri.htm.
- ↑ "Lankalovers". lankalovers.com இம் மூலத்தில் இருந்து 18 February 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050218151338/http://www.lankalovers.com/whattheysay/p_prime.shtml.
- ↑ "Prime Minister Wickremesinghe awarded an honorary doctorate" இம் மூலத்தில் இருந்து 14 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170214184400/http://www.adaderana.lk/news/39091/prime-minister-wickremesinghe-awarded-an-honorary-doctorate.
- ↑ "Sri Lanka: Former Prime Ministers". priu.gov.lk இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924082024/http://www.priu.gov.lk/PrimeMinister/formerprimeministers.html.
- ↑ "Economic Policy Statement made by Prime Minister, Ranil Wickremesinghe in Parliament" (in en-gb). https://www.news.lk/fetures/item/10674-economic-policy-statement-made-by-prime-minister-ranil-wickremesinghe-in-parliament.
- ↑ "Ranil Wickremesinghe: Sri Lanka's new prime minister faces uphill battle" (in en-GB). BBC News. 12 May 2022. https://www.bbc.com/news/world-asia-61429791.
- ↑ 23.0 23.1 Subramanian, Nirupama (23 August 2000). "Batalanda's ghosts return to haunt Ranil". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140508223725/http://hindu.com/2000/08/23/stories/03230007.htm.
- ↑ "Batalanda and Ranil – lot of explanations needed". Asian Tribune இம் மூலத்தில் இருந்து 2 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131002100848/http://www.asiantribune.com/news/2005/10/17/batalanda-and-ranil-%E2%80%93-lot-explanations-needed.
- ↑ "The Sunday Times On The Web – News/Comment". sundaytimes.lk இம் மூலத்தில் இருந்து 29 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160129070844/http://www.sundaytimes.lk/970831/newsm.html.
- ↑ "The Sunday Times News/Comment Section". Sundaytimes.lk. 20 August 2000 இம் மூலத்தில் இருந்து 15 December 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111215125119/http://sundaytimes.lk/000820/news5.html.
- ↑ Report of the Commission of Inquiry Into the Establishment and Maintenance ... – Google Books. 2000. https://books.google.com/books?id=ySQhuAAACAAJ. பார்த்த நாள்: 20 September 2012.
- ↑ "The Sunday Times Legal Column". sundaytimes.lk இம் மூலத்தில் இருந்து 29 January 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160129080310/http://www.sundaytimes.lk/980412/mudli.html.
- ↑ Subramanian, Nirupama (23 August 2000). "Batalanda's ghosts return to haunt Ranil". தி இந்து இம் மூலத்தில் இருந்து 8 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140508223725/http://hindu.com/2000/08/23/stories/03230007.htm.
- ↑ புதிய பிரதமர் ரணில் உறுதி
வெளி இணைப்புகள்
- The Wickremasinghe Ancestry
- Wijewardene Ancestry
- Hon. Ranil Wickremasinghe's Father
- Website of the Parliament of Sri Lanka
- Ranil Wickramasinghe's Web Site
- United National Party website
- "Ranil Wickramasinghe: consistency is his forte"
- BBC Profile
- Ranil re-elected as Asia-Pacific Vice Chairman of IDU
- Elections in Sri Lanka 2010
- "RANIL WICKREMASINGHE". Directory of Members (இலங்கை நாடாளுமன்றம்). http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/1244.
- சிங்கள அரசியல்வாதிகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் சனாதிபதிகள்
- 1949 பிறப்புகள்
- இலங்கைப் பிரதமர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கை பௌத்தர்கள்
- இலங்கை வழக்கறிஞர்கள்
- கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர்கள்
- இலங்கையின் துணை அமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்