நரோன் நவரா
Jump to navigation
Jump to search
| நரோன் நவரா |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 90 - 105 நாட்கள் |
| மகசூல் |
| ஏக்கருக்கு 800 கிலோ |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| கேரளம்[1] |
| நாடு |
நரோன் நவரா (NARON NAVARA) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். சோறு, சிற்றுண்டி வகைகள் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இந்த நெல் இரகம், வெள்ளை கோடுகளுடன் கருப்பு நிறத்தில் வெள்ளை முடிகள் இருப்பதால் (அதனால்தான் நரோன் நவரா என்ற பெயர் வந்தது.) தானியம், சாம்பல் நிறத்திலும், அரிசி, செந்நிறத்திலும் தடித்தும் காணப்படுகிறது. மேலும் மலையக நெல் வகையான இது, கண்ணூர் மாவட்டப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது.[1]
மிகக் குறுகிய கால சாகுபடி செய்யும் அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 90 - 105 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. மேலும் 4.5 அடி உயரம் வரை வளரும் இந்த நெற்பயிரின் மகசூல், ஒரு ஏக்கருக்கு சுமார் 800 கிலோ வரை உற்பத்தித் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Native rice varieties of Kerala - NARON NAVARA" (PDF). agroecologycentre.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-05.