கோவை ஆர் எச் - 5

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கோ ஆர் எச் - 5
CORH 5
வேளாண் பெயர்
TNTRH 55
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
TNAU 60S X CB SN 405
வகை
கலப்பின நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
6,467 கிலோ எக்டேர்[1]
வெளியீடு
2024[2]
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கோவை கலப்பின நெல் - 5 (CORH 5) என்பது; தமிழ்நாட்டின் கலப்பின நெல் வகையாகும். இது TNAU 60S மற்றும் CB SN 405 என்ற நெல் இரகத்தையும், ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நெல் இரகமாகும். TNTRH 55 என பிரபலமான பெயரில் அழைக்கப்படும் இந்நெல் இரகம், அதிக மகசூல் தரும் நடுத்தர மெல்லிய தானிய வகையாகும் என கருதப்படுகிறது.[2]

காலம்

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 120 - 125 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது.[3] மேலும் இது சம்பா மற்றும் தாளடி போன்ற பருவங்களில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, ஒரே சாகுபடி கால அளவைக் கொண்ட இரு வரிசை கலப்பினமாகும்.[1]

மகசூல்

மென்மையான ஒட்டும் நிலைத்தன்மையின் பண்புகளைக் கொண்டுள்ள கோ ஆர் எச் - 5, ஒரு எக்டேருக்கு சராசரியாக 6,467 கிலோ உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது, US 312 நெல் இரக்கத்தை விட 10% அதிகமாகவும், ஆடுதுறை - 39 நெல் வகைகளை விட 18% அதிகமாகவும் மகசூல் தருவதாக அறியப்படுகிறது.[1]

சாகுபடி

வெளியீடு

தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள TNAU, 2024 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "TNAU delivers advantageous alternative to GI-tagged Pusa basmati rice". ricenewstoday.com (ஆங்கிலம்) - © February 3, 2024. Retrieved 2025-07-08.
  2. 2.0 2.1 2.2 "VARIETIES RELEASED". tnau.ac.in (ஆங்கிலம்) - © 2023. Retrieved 2025-07-08.
  3. "IAUA NEWS - Page 10" (PDF). www.iauaindia.org (ஆங்கிலம்) - © 2025. Retrieved 2025-07-08.
"https://tamilar.wiki/w/index.php?title=கோவை_ஆர்_எச்_-_5&oldid=348619" இலிருந்து மீள்விக்கப்பட்டது