கூடலூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கூடலூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூடலூர் நகரத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரவல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,04,768 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 27,800 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 6,616 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.73% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,034 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]

புவியியல்

கூடலூர் வட்டம் தமிழ்நாட்டின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர் உயரத்தில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இவ்வட்டத்தின் வடக்கில் கர்நாடகா மாநிலமும் மேற்கு மற்றும் தெற்கில் கேரள மாநிலமும் அமையப் பெற்றுள்ளன. கோக்கால் மலை, ஊசி மலை, தவளை மலை மற்றும் ராக்வுட் மலைகள் இவ்வட்டத்திலுள்ள முக்கியமான மலைகளாகும்.

கூடலூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

  1. செருமுள்ளி I
  2. செருமுள்ளி II
  3. முதுமலை
  4. நெல்லக்கோட்டை
  5. ஸ்ரீமதுரை
  6. தேவாலா I
  7. தேவாலா II
  8. கூடலூர் I
  9. கூடலூர் II
  10. ஓ' வேலி I
  11. ஓ' வேலி II
  12. படாந்துறை I
  13. படாந்துறை II

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கூடலூர்_வட்டம்&oldid=128143" இருந்து மீள்விக்கப்பட்டது