குண்டலகேசி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.[1]குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இவர் காலம் 10-ஆம் நூற்றாண்டு.

தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும்.

விளக்க உரை

குண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார். [2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. [https://sites.google.com/site/budhhasangham/kundalakesi/ நாதகுத்தனார் இயற்றிய குண்டலகேசி - பொ.வே. சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்]
  2. http://www.tamilvu.org/ta/library-l3500-html-l3500por-133357 பெருமழைப் புலவர் திரு பொ வே சோமசுந்தரனார் விளக்கவுரையுடன் - குண்டலகேசி]

உசாத்துணைகள்

  • ஸ்ரீ சந்திரன். ஜெ, தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு, 2004.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குண்டலகேசி&oldid=10030" இருந்து மீள்விக்கப்பட்டது