நீலகேசி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது.[1]

இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 10 சருக்கங்களை கொண்டது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம்.

  1. கடவுள் வாழ்த்தும் பதிகமும் - 9 பாடல்கள்
  2. தரும உரை - 140 பாடல்கள்
  3. குண்டலகேசி வாதம் - 82 பாடல்கள்
  4. அர்க்க சந்திர வாதம் - 35 பாடல்கள்
  5. மொக்கல வாதம் - 193 பாடல்கள்
  6. புத்த வாதம் - 192 பாடல்கள்
  7. ஆசீவக வாதம் - 71 பாடல்கள்
  8. சாங்கிய வாதம் - 53 பாடல்கள்
  9. வைசேடிக வாதம் - 41 பாடல்கள்
  10. வேத வாதம் - 30 பாடல்கள்
  11. பூத வாதம் - 41 90பாடல்கள்

நீலகேசியின் காலம்

நீலகேசியின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என கணிக்கப்பட்டுள்ளது[2]. ஆனால் நீலகேசியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்ம கீர்த்தி சிந்தனைகள் காணப்படுவதால் நீலகேசி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது என லி. சிவகுமார் கருதுகின்றார். [3]

மேற்கோள்கள்

  1. அ. சக்கரவர்த்தி நயினார்(ப.ஆ.) நீலகேசி சமய திவாகர வாமன முனிவர் உரையுடன்
  2. https://books.google.co.in/books?id=HgLjrX3Y1g8C&pg=PA175&redir_esc=y#v=onepage&q&f=false
  3. லி. சிவகுமார், நீலகேசியின் காலமும் கருத்தும், சான்லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ், மலர் 2, இதழ் 3, ஜனவரி 2018 ,ISSN: 2454-3993

உசாத்துணைகள்

  • ஸ்ரீ சந்திரன். ஜெ, தமிழ் இலக்கிய வரலாறு, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு, 2004.

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நீலகேசி&oldid=12982" இருந்து மீள்விக்கப்பட்டது