வைட்டிலா - 3
| வைட்டிலா - 3 VTL 3 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| வைட்டிலா - 1 X TN 1 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| வெளியீடு |
| 1987 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
வைட்டிலா - 3 (VTL 3) எனப்படும் இந்த நெல் வகை, வைட்டிலா - 1 மற்றும் பூர்வீக தைச்சுங் - 1 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைவு அமைப்பு (HS) முறையில் உருவாக்கப்பட்ட கேரளாவின் ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS), 1987 ஆம் ஆண்டு இந்த நெல் இரகத்தை வெளியிடபட்டதாக அறியப்படுகிறது.[2]
பின்னணி
கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் உப்புத்தன்மை கொண்ட பகுதிகளில் விரிப்பு பருவத்திற்கு ஏற்றது. நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் நெல் வகையான இது, 110 - 115 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[3] மேலும் இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[4][5]
சான்றுகள்
- ↑ "Varieties Released - 38 Vyttila 3". kau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-10.
- ↑ Rice Research Station, Vyttila
- ↑ "Paddy varieties of Kerala - Medium duration varieties - Vyttila-3". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-10.
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-10.
- ↑ "KAU Agri-infotech portal". www.celkau.in (ஆங்கிலம்) - 2019. Retrieved 2025-10-10.