மங்கொம்பு - 12

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 14:51, 1 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மங்கொம்பு - 12
MO 12 - Ranjini
வேளாண் பெயர்
இரஞ்சினி (Ranjini)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 5 X மேம்பட்ட சோனா
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
வெளியீடு
1995
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

மங்கொம்பு - 12 (MO 12 - Ranjini) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] மங்கொம்பு - 5 மற்றும் மேம்பட்ட சோனா ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[2] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1995[3] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, இரஞ்சினி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[2]

பின்னணி

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[4] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் பழுப்பு நிறத் தத்துப்பூச்சி மற்றும் குலைநோய் போன்ற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட குள்ள நெல் இரகமாகும்.[5]

சான்றுகள்

  1. Paddy varieties of Kerala - Renjini (MO 12)
  2. 2.0 2.1 "Varieties Released - MO 12-Ranjini". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-31.
  3. Varieties released/ identified MO.12 Renjini
  4. Kerala Agricultural University (KAU) Medium Duration - Renjini (MO-12)
  5. "Rice Variety information Kole lands Medium duration Ranjini (MO-12):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-31.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_12&oldid=456439" இலிருந்து மீள்விக்கப்பட்டது