பாபட்லா - 1768

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 15:22, 15 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாபட்லா - 1768
BPT 1768
வேளாண் பெயர்
பாபட்லா சன்னலு
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
சொர்ணமசூரி X ARC 6650
வகை
கலப்பின நெல் வகை
காலம்
155 - 160 நாட்கள்[1]
மகசூல்
6000 - 6500 கிலோ எக்டேர்
வெளியீடு
2002[2]
வெளியீட்டு நிறுவனம்
CVRC / SVRC, பாபட்லா[3]
மாநிலம்
ஆந்திரப் பிரதேசம்
நாடு
 இந்தியா

பாபட்லா - 1768 (BPT 1768), எனப்படும் இந்த நெல் வகை, பாபட்லா - 3301 (BPT 3301) மற்றும் மசூரி விகாரி (Mahsuri mutant) ஆகிய நெல் இரகங்களை பரம்பரை முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட, தென்னிந்தியப் பிராந்தியமான ஆந்திர மாநிலத்தின் நெல் இரகமாகும். "நடுவண் வகை வெளியீட்டுக் குழு (CVRC)" மற்றும் "மாநில வகை வெளியீட்டுக் குழு (SVRC)" ஆகியவையால் 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பாபட்லா சன்னலு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

காலம்

நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 155 - 160 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா சாகுபடி பருவத்தில் பயிரிடப்படும் இந்த நெல்வகை, சம்பாப் பருவத்தில் ஆந்திர மாநில கிருஷ்ணா ஆற்றின் மேற்கு கழிமுகப் பகுதிகள் மற்றும் தெலுங்கானா மாநில நாகார்ஜுன சாகர் அணைப் பகுதிகள் போன்ற ஈரத்தன்மையுள்ள நிலங்களில் பெருமளவு பயிரடப்படுவதாக கருதப்படுகிறது.[1]

மகசூல்

பாக்டீரியா இலை கருகல் நோய், மற்றும் சாருறுஞ்சும் பூச்சிகளுக்கு வெகுவான எதிர்ப்புத்திறன் கொண்ட பாபட்லா - 1768, ஒரு எக்டேருக்கு சுமார் 6,000 முதல், 6500 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது. மேலும் மழை மற்றும் மிதமான வெள்ளப்பெருக்கு காலத்தில் முழுமையாக நிலைத்து நிற்கும் தன்மை கொண்ட இதன் நெற்பயிர்கள், 7 நாட்கள் வரை நீரில் மூழ்கும் நிலையிலும் தாங்கும் திறன் உடையதாகவும், உறையாத மற்றும் சிதறாத, நடுத்தர மெல்லிய தானியத்தை கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Bapatla Sannalu (BPT 1768)" (PDF). angrau.ac.in (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-15.
  2. - icar-iirr.org - Varieties released from RRU Bapatla
  3. Paddy varieties released from Agricultural Research Station, Bapatla
"https://tamilar.wiki/w/index.php?title=பாபட்லா_-_1768&oldid=433648" இலிருந்து மீள்விக்கப்பட்டது