டி - 23 (நெல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 04:21, 26 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

டி - 23 (T-23) என்பது; 1975 ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட, நீண்டகால நெல் வகையாகும்.[1] 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், “கலா சுகதாஸ்”[2] எனும் நெல் வகையிலிருந்து தெரிவு செய்யப்பட்டதாகும். நீர்ப்பாசன வசதியுடனான மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய இந்த நெற்பயிர், உயரமாகவும், இதன் நெல் தானியங்கள் பெரிய அளவிலும், மற்றும் நறுமணமும் உடையதாக உள்ளது. ஒரு எக்டேருக்கு சுமார் 3000 - 3500 கிலோ (30-35 Q/ha) மகசூல் தரவல்ல இது, உத்தரப் பிரதேசம், மற்றும் இமாச்சலப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[3]

மேற்கோள்கள்

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Non-Basmati aromatic :". Archived from the original on 2016-08-16. Retrieved 2017-04-01.
  3. "Details of Rice Varieties : Page 1 - 23 - T-23". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-04-01.
"https://tamilar.wiki/w/index.php?title=டி_-_23_(நெல்)&oldid=384071" இலிருந்து மீள்விக்கப்பட்டது