கோவை - 54 (நெல்)

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 15:15, 18 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மகசூல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கோவை - 54
CO 54
வேளாண் பெயர்
CB 12588
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
CB 04110 x CB 05501
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
6354 கிலோஎக்டேர்
வெளியீடு
2021
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

கோவை 54 (CO 54) என்பது, CB 04110 x CB 05501 கலப்பினத்தால் உருவான CB 12588 என்ற தமிழ்நாட்டின் நெல் வகையாகும். CO 51 மற்றும் ADT 43 க்கு மாற்று இரகமாக கோ 54 உருவாக்கப்பட்டதாகும்.மேலும் நடுத்தர உயரத்தில் வளரக்கூடிய இரகம், 105 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது (வேறுறொரு மூலாதாரத்தின்படி 115 – 120 நாட்கள் எனப்படுகிறது.[1]).[2]

வெளியீடு

தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2021 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

மகசூல்

பல்வேறு மகசூல் சோதனைகளில் CB 12588 ஒட்டுமொத்த சராசரியாக தானிய மகசூல், எக்டேருக்கு 6354 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கோவை - 51 ஐ விட 10.83 சதவீத முன்னேற்றத்தையும் ஆடுதுறை - 43 ஐ விட 10.35 சதவீத முன்னேற்றத்தையும் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அதிக வேளாண் மற்றும் உடலியல் செயல்திறன் காரணமாக கோ 54 அதிக மகசூல் தரும் திறனைக் கொண்டுள்ளதாகவும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரின் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் எக்டேருக்கு அதிகபட்ச மகசூல் 9259 கிலோவாக பதிவாகியுள்ளது. தகவமைப்பு ஆராய்ச்சி சோதனையில் 16 இடங்களில் எக்டேருக்கு 7000 கிலோவிற்கு மேல் அதிக மகசூல் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.[2]

சான்றுகள்

  1. https://www.tnauagricart.com/productDetails/15623ee0d7b8cdb79fc6
  2. 2.0 2.1 2.2 "CO 54 (IET 24313) : An early maturing high yielding rice variety with marketable grain quality suitable for Tamil Nadu". www.ejplantbreeding.org (ஆங்கிலம்) - © 2020. Retrieved 2025-06-18.
"https://tamilar.wiki/w/index.php?title=கோவை_-_54_(நெல்)&oldid=348597" இலிருந்து மீள்விக்கப்பட்டது