ஆடுதுறை - 51

தமிழர்விக்கியிலிருந்து
imported>Anbumunusamy பயனரால் செய்யப்பட்ட 15:55, 1 சூலை 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஆடுதுறை - 51
ADT 51
வேளாண் பெயர்
ADT 51
(AD 09367) (IET 23617)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
BPT 5204 x வெள்ளைப் பொன்னி[1]
வகை
புதிய நெல் வகை
காலம்
155 - 160 நாட்கள்[1]
மகசூல்
6533 கிலோ எக்டேர்[2]
வெளியீடு
2017[3]
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை[3]
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஆடுதுறை - 51 அல்லது ஏடிடீ - 51 (ADT 51), சுட்டுப் பெயர்: (AD 09367), முன்மொழிவு எண்: (IET 23617) எனப்படும் இந்த நெல் வகை, BPT 5204 மற்றும் மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி ஆகிய நெல் இரகங்களின் வழித்தோன்றலாக உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

வெளியீடு

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள TRRI நிறுவனத்தால் 2017 ஆம் ஆண்டு, ஆடுதுறை - 51 நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[3]

காலம்

மத்திய மற்றும் நீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 155 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாகவும், விதைப்புப் பருவதிற்கு ஆகத்து முதல் செப்டம்பர் வரையிலான சம்பாப் பருவம் ஏற்றதாக கூறப்படுகிறது.[2]

சாகுபடி

தமிழகத்தின் காவிரி கழிமுகப் பகுதியில் ஒற்றைப் பருவ கால்வாய் சார்ந்த நெல் வளரும் பகுதிகளுக்கு நன்கு பொருந்தக்கூடியதாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]

மகசூல்

CR 1009 நெல் இரக்கத்தை ஒத்த சமையல் குணங்கள் உள்ளதாக கூறப்படும் இந்நெல் வகை,[2] ஒரு எக்டேருக்கு சுமார் 6533 கிலோவாக பதிவு செய்துள்ளது. இது CR 1009 (5947 கிலோ/எக்டேர்) மற்றும் ADT 50 (5796 கிலோ/எக்டேர்) ஐ விட முறையே 9.8 மற்றும் 12.7 சதவீதம் அதிகமாகும். தஞ்சாவூர் மாவட்டம் திருவிசநல்லூரில் இது 10036 கிலோ/எக்டேர் என்ற அதிகபட்ச மகசூலை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.[2]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "Season and Varieties: Rice ADT 51". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2008 - 2023. Retrieved 2025-06-26.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Rice ADT 51 - A high yielding long duration rice variety suitable for Samba season in Cauvery Delta Zone of Tamil Nadu". www.ejplantbreeding.org (ஆங்கிலம்) - © 2020. Retrieved 2025-06-26.
  3. 3.0 3.1 3.2 "Varieties Released". tnau.ac.in (ஆங்கிலம்) - © 2019. Retrieved 2025-06-26.
"https://tamilar.wiki/w/index.php?title=ஆடுதுறை_-_51&oldid=262708" இலிருந்து மீள்விக்கப்பட்டது