வெண்ணந்தூர்
| வெண்ணந்தூர்
பழைய பெயர் வெண்ணைநல்லூர் | |||||||
| — பேரூராட்சி — | |||||||
| அமைவிடம் | |||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | நாமக்கல் | ||||||
| வட்டம் | இராசிபுரம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | |||||||
| பேரூராட்சி தலைவர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,568 (2011[update]) • 3,029/km2 (7,845/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 4.81 சதுர கிலோமீட்டர்கள் (1.86 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
வெண்ணந்தூர் (ஆங்கிலம்: Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்குள்ளது. இங்கு வெண்ணந்தூர் ஏரி உள்ளது.வெண்ணந்தூர் பேரூராட்சியின் பிரதான தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது.
அமைவிடம்
வெண்ணந்தூரில் இருந்து அதன் மாவட்டத் தலைநகர் நாமக்கல் 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 15 கி.மீ. தொலைவில் உள்ள இராசிபுரம் தொடருந்து நிலையம் ஆகும்.
இதன் கிழக்கே அத்தனூர் 5 கி.மீ.; மேற்கே ஆட்டையாம்பட்டி 5 கி.மீ.; வடக்கே மல்லூர் 7 கி.மீ. மற்றும் தெற்கே சௌதாபுரம் ஊராட்சி 5 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
4.81 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 47 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] வெண்ணந்தூர் பேரூராட்சியில் K. P. AR. ராமசாமி முதலியார் மருத்துவமனை உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 3,844 வீடுகளும், 14,568 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வெண்ணந்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vennanthur Population Census 2011