லால் சலாம் (2024 திரைப்படம்)
லால் சலாம் | |
---|---|
இயக்கம் | ஐசுவர்யா ரசினிகாந்த் |
தயாரிப்பு | சுபாஸ்கரன் அல்லிராஜா |
திரைக்கதை | விஷ்ணு ரங்கசாமி ஐஸ்வர்யா ரசினிகாந்த |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | விஷ்ணு ரங்கசாமி |
படத்தொகுப்பு | பி. பிரவீன பாஸ்கர் |
கலையகம் | லைக்கா தயாரிப்பகம் |
விநியோகம் | ரெட் ஜெயன்ட் மூவீசு |
வெளியீடு | பெப்ரவரி 9, 2024 |
ஓட்டம் | 150 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | மதிப்பீடு. ₹80–90 கோடிகள் [2] |
மொத்த வருவாய் | ₹36.1 கோடிகள்.[3] |
லால் சலாம் ( டal Salaam) என்பது ஐசுவர்யா ரசினிகாந்த் இயக்கத்தில லைகா புரொடக்ஷன்ஸின் கீழ் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில 2024 இல் வெளிவந்த இந்திய தமிழ் மொழி விளையாட்டு அதிரடி திரைப்படமாகும். இப்படத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே. எஸ். ரவிக்குமார், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் நவம்பர் 2022 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் 2023 இல் தொடங்கியது. சென்னை, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, ஆகஸ்ட் 2023 தொடக்கத்தில் முடிக்கப்பட்டது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லால் சலாம் 9 பிப்ரவரி 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4] படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இசை.
ஐசுவர்யா ரசினிகாந்த் இயக்கியிருக்கும் திரைப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் முதன்முதலில் இசையமைத்துள்ளார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Lal Salaam". British Board of Film Classification. Archived from the original on 8 February 2024. பார்க்கப்பட்ட நாள் 8 February 2024.
- ↑ "Lal Salaam Box Office Collection Day 1". Live Mint. 10 February 2024. Archived from the original on 10 February 2024. பார்க்கப்பட்ட நாள் 10 February 2024.
- ↑ "Lal Salaam Closing: Worldwide Box office Collections". tracktollywood. 29 February 2024. Archived from the original on 29 February 2024. பார்க்கப்பட்ட நாள் 29 February 2024.
- ↑ "Lal Salaam box office Day 6: Aishwarya Rajinikanth's film continues its underwhelming run, yet to hit Rs 15 crore mark". இந்தியன் எக்சுபிரசு. 15 February 2024. Archived from the original on 15 February 2024. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
- ↑ "Vishnu Vishal elated about AR Rahman composing music for 'Lal Salaam'". The Times of India. 22 March 2023. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257 இம் மூலத்தில் இருந்து 10 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230810232253/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishnu-vishal-elated-about-ar-rahman-composing-music-for-lal-salaam/articleshow/98906318.cms?from=mdr.