ரெய்டு
ரெய்டு | |
---|---|
திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | கார்த்தி |
தயாரிப்பு | எஸ். கே. கனிசுக் ஜி. மணிகண்ணன் |
கதை | எம். முத்தையா (வசனங்கள்) |
திரைக்கதை | கார்த்தி |
இசை | சாம் சி. எஸ். |
நடிப்பு | விக்ரம் பிரபு ஸ்ரீ திவ்யா |
ஒளிப்பதிவு | கதிரவன் |
படத்தொகுப்பு | மணிமாரன் |
கலையகம் | எம் சுடியோசு ஓபன் சுகிரீன் சுடியோசு ஜி பிக்சர்சு |
வெளியீடு | 10 நவம்பர் 2023 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரெய்டு (Raid (2023 film)) என்பது 2023 இல் வெளிவந்த தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். கார்த்தி எழுதி இயக்கிய, இப்படத்திற்கான வசனத்தை எம். முத்தையா எழுதியிருந்தார். இப்படம் சிவராஜ்குமார் நடிப்பில் 2018 இல் வெளியான கன்னடப் திரைப்படமான டகருவின் மறுஆக்கமாகும். [1] இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா நடித்திருந்தனர். இரிஷி இரித்விக் வில்லனாக நடித்திருந்தார். சாம் சிஎஸ் இசையமைத்திருந்தார். 6 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் ஸ்ரீ திவ்யா நடித்த தமிழ்த் திரைப்படமாகும்.
நடிகர்கள்
- உதவி ஆணையாளர் பிரபாகரனாக விக்ரம் பிரபு
- வெண்பாவாக ஸ்ரீ திவ்யா
- வெண்மதியாக அனந்திகா சனில்குமார்
- தாலியாக இரிஷி இரித்விக்
- ஹரீஷ் பேரடி
- சிட்டியாக சௌந்தரராஜா
- கரப்பான் பூச்சியாக டேனியல் அன்னி போப்
- மாமாவாக வேலு பிரபாகரன்
தயாரிப்பு
டகரு (2018) திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து, தமிழின் மறுஆக்கப் பதிப்பின் பதிப்புரிமையை இயக்குநர் எம். முத்தையாவுக்கு விற்கப்பட்டது. இவர் படத்தை விக்ரம் பிரபுவுடன் மறுஆக்கம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டார். [2] [3] [4] வெள்ளைக்கார துரை திரைப்படத்திற்குப் பின்னர் விக்ரம் பிரபு ஸ்ரீ திவ்யாவுடன் இரண்டாவது தடவையாக முக்கிய வேடங்களில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது ஸ்ரீ திவ்யாவின் கடைசித் தமிழ்ப் படமான சங்கிலி புங்கிலி கதவ தொறே திரைப்படத்திற்குப் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து நடித்த முதல் திரைப்படமாகும். இதன் தமிழ் மறுஆக்கத்திற்கு ரெய்டு என்று தலைப்பு வைக்கப்பட்டது. [5]
பாடல்கள்
படத்தின் பாடல்கள் பின்னணி இசை ஆகியவற்றிற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை மோகன் ராஜன் எழுதியிருந்தார். ஒலிச்சுவடு சரேகமவால் விற்கப்பட்டது.
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஏன்டா மாட்டாத" | மோகன் இராஜன் | சாம் சி. எஸ்., சிவம் | 3:27 | |
2. | "அழகு செல்லம்" | மோகன் இராஜன் | ஹரிசரண், புவனா ஆனந்து | 4:16 | |
3. | "அய்யோ கையோ" | மோகன் இராஜன் | ரனீனா ரெட்டி | 3:18 | |
மொத்த நீளம்: |
11:01 |
வெளியீடு
திரைப்படம் தீபாவளிக்கு முன்னதாக 2023 நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது. [6] இப்படம் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேற்கோள்கள்
- ↑ https://www.timesnownews.com/entertainment-news/tamil/raid-movie-review-vikram-prabhus-crime-thriller-is-an-action-entertainer-review-105104210
- ↑ "Director Muthaiah to remake Kannada super hit Tagaru". 25 October 2018. பார்க்கப்பட்ட நாள் 28 October 2018.
- ↑ "Shivarajkumar-starrer Tagaru's Tamil remake rights sold to director Muthaiah". பார்க்கப்பட்ட நாள் 28 October 2018.
- ↑ "Tagaru to be remade in Tamil". https://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/tagaru-to-be-remade-in-tamil/articleshow/66346828.cms.
- ↑ "Vikram Prabhu's 'Raid' gearing up for February release". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vikram-prabhus-raid-gearing-up-for-february-release/articleshow/97175917.cms?from=mdr.
- ↑ "Vikram Prabhu's 'Raid' to join the Diwali race". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/vikram-prabhus-raid-joins-the-diwali-race/articleshow/104369977.cms.