ஸ்ரீ திவ்யா
ஸ்ரீ திவ்யா | |
---|---|
பிறப்பு | ஸ்ரீ திவ்யா ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2010–தற்போது |
உயரம் | 5'4" |
ஸ்ரீதிவ்யா (SriDivya) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஐதராபாத்தில் பிறந்தார். இவர் தனது கல்வியை கேந்திரிய வித்யாலயத்தில் பயின்றார்.[1]
தொழில்
ஸ்ரீ திவ்யா மூன்று வயதில் தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திவ்யா 2010 ஆண்டு ரவி பாபு இயக்கிய மனசார எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் தோல்வியைத் தழுவியது. பிறகு 2012 இல் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் படத்தில் பிரின்சுடன் இணைந்து நடித்த இப்படமானது, வெற்றி அடைந்தது.[2][3][4][5]
பின் திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன் உடன் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானர். இதில் அவரது நடிப்பு விமர்சகர்களால் மிகவும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.[6]. பிறகு பென்சில் எனும் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார்.[7] மேலும் ஈட்டி, காக்கி சட்டை மற்றும் வெள்ளைக்கார துரை படங்களிலும் நடித்துள்ளார்.[8]
திரைப்பட வரலாறு
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
2000 | ஹனுமான் ஜங்ஷன் | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | ||
2000 | யுவராஜு | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | ||
2003 | வீடே | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | ||
2010 | மனசார | அஞ்சலி | தெலுங்கு | ||
2012 | பஸ் ஸ்டாப் | சைலஜா | தெலுங்கு | ||
2013 | மல்லெல தீரம் லோ சிரிமல்லெ புவ்வு | லட்சுமி | தெலுங்கு | ||
2013 | வருத்தப்படாத வாலிபர் சங்கம் | லதா பாண்டி | தமிழ் | ||
2014 | ஜீவா | ஜென்னி | தமிழ் | ||
2014 | வெள்ளைக்கார துரை | யமுனா | தமிழ் | ||
2015 | காக்கி சட்டை | திவ்யா | தமிழ் | ||
2015 | பென்சில் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
2015 | ஏத்தி | தமிழ் | படப்பிடிப்பில் | ||
2016 | மருது | பாக்கியலட்சுமி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Sri Divya in Tamil flick". The Hindu. 2011-05-08. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/sri-divya-in-tamil-flick/article1999879.ece. பார்த்த நாள்: 2013-09-13.
- ↑ Gupta, Rinku (2013-08-07). "Kollywood's new pretty young thing". The New Indian Express. http://newindianexpress.com/entertainment/tamil/Kollywoods-new-pretty-young-thing/2013/08/07/article1721794.ece. பார்த்த நாள்: 2013-09-13.
- ↑ "Ravi Babu interview - Telugu Cinema interview - Telugu film director". Idlebrain.com. http://www.idlebrain.com/celeb/interview/ravibabu-manasara.html. பார்த்த நாள்: 2013-09-13.
- ↑ Sashidhar AS, TNN Nov 20, 2012, 11.19AM IST (2012-11-20). "Maruthi to direct Sunil - Times Of India". Articles.timesofindia.indiatimes.com இம் மூலத்தில் இருந்து 2013-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130513155222/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-20/news-interviews/35227400_1_maruthi-ee-rojullo-sunil. பார்த்த நாள்: 2013-09-13.
- ↑ "‘Bus Stop’ heroine bags a biggie in Tamil". 123telugu.com. 1998-01-01. http://www.123telugu.com/mnews/bus-stop-heroine-bags-a-biggie-in-tamil-hm.html. பார்த்த நாள்: 2013-09-13.
- ↑ Posted by: Shekhar. "Sri Divya's Performance In VPVS Bags Rave Reviews - Oneindia Entertainment". Entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2013-09-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130914035428/http://entertainment.oneindia.in/telugu/news/2013/sri-divya-rave-reviews-varutha-padatha-valibar-sangam-119597.html. பார்த்த நாள்: 2013-09-13.
- ↑ "Sri Divya is GV Prakash’s heroine!". Sify.com. 2013-10-17. http://www.sify.com/movies/sri-divya-is-gv-prakashs-heroine-news-tamil-nkrkE6jdgbb.html. பார்த்த நாள்: 2013-12-25.
- ↑ http://www.sify.com/movies/vikram-prabhu-goes-back-to-the-villages-news-tamil-oevl8mgdbiesi.html