மோகன் இராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மோகன் இராஜன்
பிறப்பு1984
தேசியம்இந்தியன்
குடியுரிமைஇந்தியா
பணிதிரைப்படப் பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது

மோகன் ராஜன் (Mohan Rajan) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.[1] [2]

தொழில்

மோகன் ராஜன் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி வளையப்பட்டியைச் சேர்ந்தவர். 2001 இல் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியராக வேண்டும் என்ற நம்பிக்கையில் சென்னைக்கு வந்தார். இருப்பினும், இவர் ஒரு திருப்புமுனையைப் பெறத் தவறிவிட்டார். அதற்குப் பதிலாக சென்னை லயோலா கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். பின்னர் ஊடகக் கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். யாதுமாகி திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தனால் பாடலாசிரியரானார். பாடல் வெளியான உடனேயே, இவர் வசந்தனின் நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சசிகுமாருடன் பழகினார். அவருடைய திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் பணிகளை மோகனிடம் வழக்கமாக வழங்கினார். ஈசன் திரைப்படத்தில் "ஜில்லா விட்டு" பாடலையும், பின்னர் சசிகுமாரின் திரைப்படமான சுந்தரபாண்டியனில் "கொண்டாடும் மனசு" பாடலையும் எழுதியது குறிப்பிடத்தக்கது. மோகன் சென்னை பிஎஸ்பிபி பள்ளியில் படித்தார்.

விக்ரம் மற்றும் ஜீவா நடித்த பிஜாய் நம்பியாரின் டேவிட் திரைப்படத்தில் இடம்பெற்ற "கனவே கனவே" என்ற ஒரு சோகப் பாடல் மோகன் ராஜனின் திருப்புமுனைப் பாடலானது. இப்பாடலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பாடியிருந்தார். [3] [4] இவரது திருப்புமுனைப் பாடலிலிருந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆயிரமாவது திரைப்படமான தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்களில் பணியாற்றினார். 2015 இன் சண்டி வீரன் திரைப்படத்தில் மோகன் ராஜனின் பணியால் ஈர்க்கப்பட்ட பாலா பின்னர் இவரைத் தேர்ந்தெடுத்தார்.

மோகன் விக்ரம் வேதா திரைப்படத்தில் "யாஞ்சி யாஞ்சி" போன்ற பிரபலமான பாடலை எழுதினார். மேலும் கொடிவீரன், படைவீரன் போன்ற திரைப்படங்களில் பாடல்களை எழுதினார்.[3]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் பாடகர்(கள்)
2010 யாதுமாகி "பேசுப் மின்சாரம்" ஜேம்ஸ் வசந்தன் பென்னி தயாள்
ஈசன் "ஜில்லா வீட்டு" ஜேம்ஸ் வசந்தன் தஞ்சை செல்வி
2011 சங்கரன்கோவில் "தென்பாண்டி மக்களின்"

"எங்க குலசாமி"
இரசினி சிறீராம்

இரசினி
2012 சுந்தர பாண்டியன் "கொண்டாடும் மனசு" என். ஆர். ரகுநந்தன் ஆனந்த் அரவிந்தக்சன்
2013 டேவிட் "இரவினில் உளவவா" என்ற பாடல் தவிர அனைத்துப் பாடல்களும் அனிருத் ரவிச்சந்திரன் அனிருத் ரவிச்சந்திரன்
குட்டிப் புலி "தாட்டியரே தாட்டியரே" ஜிப்ரான் கோல்டு தேவராஜ்
2016 தாரை தப்பட்டை "வதன வதன வடிவேலனே" இளையராஜா கவிதா கோபி, பிரியதர்ஷினி
முத்தின கத்திரிக்கா "ஆச்சா போச்சா", "சும்மா சொல்லக்கூடாது", "எனக்கென்ன ஆச்சோ", "ஆகா ஓகோ எலக்சனே" சித்தார்த் விபின் அந்தோணிதாசன், செகதீசு குமார், ஆந்தி சோசி, குரு
காதலும் கடந்து போகும் "க க க போ" சந்தோஷ் நாராயணன் சந்தோஷ் நாராயணன்
ஜாக்சன் துரை "ஏதேதோ" சித்தார்த் விபின் சின்மயி, கார்த்திக்
2017 விக்ரம் வேதா "யாஞ்சி யாஞ்சி" சாம் சி. எஸ். அனிருத் ரவிச்சந்திரன், சக்திஸ்ரீ கோபாலன், சத்தியபிரகாஷ்
கொடிவீரன் "அய்யோ அடி ஆத்தி" என். ஆர். ரகுநந்தன் ஜெகதீஷ், வந்தனா சீனிவாசன்
2018 கலகலப்பு 2 "ஒரு குச்சி ஒரு குல்பி" என்ற பாடலைத் தவிர அனைத்துப் பாடல்களும் ஹிப்ஹாப் தமிழா
ராஜா ரங்குஸ்கி "கிஃப்ட் ஆஃப் லைஃப்", "காதல் கானா", "மிஸ்டர். எக்சு" யுவன் சங்கர் ராஜா சிலம்பரசன், பரிதா, வி. எம். மகாலிங்கம்
பியார் பிரேமா காதல் "காற்றே உன் காலடியை" யுவன் சங்கர் ராஜா யுவன் சங்கர் ராஜா
படைவீரன் "கொம்பாதி கொம்பனடா" கார்த்திக் ராஜா முகேஷ்
எழுமின் "மின்மினி கூட்டமே" கணேஷ் சந்தரசேகரன் ஜெகதீஷ், யாமினி கண்டசாலா
கனா "ஊஞ்சலா ஊஞ்சலா"

"சவால்"
திபு நினன் தாமசு சித் ஸ்ரீராம், நிரஞ்சனா இரமணன்

திபு நினன் தாமசு, அருண்ராஜா காமராஜ், ரேபிட் மாக்
2019 சிவப்பு மஞ்சள் பச்சை 4 பாடல்கள் சித்து குமார் சிறீகாந்து அரிகரன்,

நரேசு ஐயர், சாசா திருப்பதி, சுதர்சன் அசோக், ஜோதி புஷ்பா, அனிதா கார்த்திகேயன், ஆனந்து அரவிந்தக்சன், சாசா திருப்பதி

காவியன் "எதுவந்தா என்ன" சியாம் மோகன் ஆனந்து, திவாகர்
சேம்பியன் "வா மகனே" அரோள் கரோலி ஹரிசரண்
2020 டாக்டர் "நெஞ்சமே" அனிருத் ரவிச்சந்திரன் அனிருத் ரவிச்சந்திரன்
2021 அரண்மனை 3 "ராசாவாச்சியே" சி. சத்யா சித் ஸ்ரீராம்
"லொஜக்கு மொஜக்கு" முகேஷ்
ஓ மணப்பெண்ணே! "ஓ மணப்பெண்ணே" விஷால் சந்திரசேகர் சிந்துரி விஷால்
"சோம்பல்.. பாடல்" சிந்துரி விஷால், லேடி காஷ்
"ஆவோ ஜி ஆவோ" கானா பாலா
"சகியே" யாசின் நிசர்
2022 777 சார்லி (தமிழ் பதிப்பு) "பயணப் பாடல்" நோபின் பௌல் ஜாசி கிஃப்ட், அரவிந்த் கர்னீசுவரன்
O2 "சுவாசமே" விஷால் சந்திரசேகர் பிருந்தா சிவக்குமார்
2023 குட் நைட் அனைத்துப் பாடல்கள்

"நான் காலி" "சில் மக்கா" "பாலபத்ர" "போ" "அருக்காணி அங்கம்மா" "அன்பிற்கும்" "நான் காலி (2)"

ஷான் ரோல்டன் ஷான் ரோல்டன், கல்யாணி நாயர்

பிரதீப் குமார் "தேனிசைத் தென்றல்" தேவா ஷான் ரோல்டன் மீனாட்சி இளையராஜா எம். லலிதா சுதா ஷான் ரோல்டன்

மேற்கோள்கள்

 

"https://tamilar.wiki/index.php?title=மோகன்_இராஜன்&oldid=23742" இருந்து மீள்விக்கப்பட்டது