சக்திஸ்ரீ கோபாலன்

சக்திஸ்ரீ கோபாலன் (பிறப்பு 25 அக்டோபர் 1987) ஓர் இந்தியப் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் கலைஞர் ஆவார். ஏஆர் ரஹ்மான் போன்ற சிறந்த தென்னிந்திய இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதற்காகப் பிரபலமானவர். திரைப்பட இசையைத் தவிர, பல ஆண்டுகளாகப் பல்வேறு பாப், ஆர்'என்'பி, ட்ரிப்-ஹாப் மற்றும் ஜாஸ் இசைக்குழுக்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.[1]

சக்திஸ்ரீ கோபாலன்
Shakthisree Gopalan.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு25 அக்டோபர் 1987 (1987-10-25) (அகவை 37)
கொச்சி, கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்
தொழில்(கள்)
  • பாடகர்
  • பாடலாசிரியர்
  • இசையமைப்பாளர்
இசைக்கருவி(கள்)
  • கித்தார்
  • பாடுதல்
இசைத்துறையில்2008–இன்று வரை
இணைந்த செயற்பாடுகள்Off The Record
Pyjama Conspiracy
இணையதளம்shakthisreegopalan.com

சக்திஸ்ரீ பல மொழிகளில் தானே பாடல்களை இசையமைத்து வெளியிட்டும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வருகிறார். அவர் ஒரு தொழில்முறைக் கட்டிடக் கலைஞர் ஆவார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இளமை

சக்திஸ்ரீ கோபாலன் கேரளாவின் கொச்சியில் பிறந்து வளர்ந்தவர். தனது பள்ளிப்படிப்பை களமச்சேரியில் உள்ள ராஜகிரி பொதுப் பள்ளியில் பயின்றார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரியில் கட்டிடக்கலை பயில்வதற்காகச் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.[2]

சக்திஸ்ரீ கர்நாடக இசையில் 13 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது, எஸ்எஸ் மியூசிக் குரல் வேட்டை 1 ஐ நடத்தியது. அப்போது அவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால், அது குரல் தேர்வுடன் முடிந்தது. பின்னர் 2008 இல், எஸ்.எஸ் மியூசிக் குரல் வேட்டையின் இரண்டாவது சீசனை வென்றார். 2008ஆம் ஆண்டு டாக்ஸி 4777 திரைப்படத்திற்காகத் தனது முதல் பாடலைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.[3][4]

தொழில்

புகழ்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியான கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியை வடிவமைக்கும் பணி கிடைத்தபோது அவரைச் சந்தித்தார் சக்திஸ்ரீ. அந்த நேரத்தில் தான் இசையமைத்த இசையை அவருடன் பகிர்ந்து கொண்டார். அப்போதுதான் அவர் தனது இசைப்பயணத்தில் பதிவு செய்த முதல் பாடலான கடல் படத்திற்காக 'நெஞ்சுக்குள்ளே' பாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும், ரஹ்மானின் பாலிவுட் படத்திற்கான தலைப்புப் பாடல், ஜப் தக் ஹை ஜான் (2012) முதலில் வெளியிடப்பட்டது.[5]

அவர் தொடர்ந்து "இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்", "கற்றது களவு" போன்ற படங்களுக்குப் பல பாடல்களைப் பதிவு செய்தார்.

திரைப்படங்களுக்கான பின்னணிப் பாடலைத் தவிர, சக்திஸ்ரீ பிரசாந்துடன் இணைந்து நவம்பர் 2017 இல் பிகின் என்ற தனித்த இசைப் பாடலை வெளியிட்டார் [6]

டிசம்பர் 2016 இல், அவர் டொராண்டோவைச் சேர்ந்த கீபோர்ட் கலைஞர்-தயாரிப்பாளரான ஹரி டஃபுசியா உடனும் ஒரு பாஸ் வாசிப்பாளரான நைகல் ரூப்னரைனுடன் இணைந்து 'பை யுவர் சைட்' வெளியிட்டார்.[7]

பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுக்காக அக நக என்ற பாடலைப் பதிவு செய்தார். இது முதலில் அப்படத்தின் முதல் பாகத்தில் சிறிய பின்னணிப் பாடலாக ஒலித்தது. இந்தப் பாடல் முதல் பாகம் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. முழுப் பாடலும் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டது.

இசையமைப்பாளராக அறிமுகம்

2023 ஆம் ஆண்டு எஸ். சஷிகாந்த் இயக்கிய தி டெஸ்ட் திரைப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்த திரைப்படத்திற்காக அவர் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

விருதுகள்

சக்திஸ்ரீ கடல் திரைப்படத்தில் "நெஞ்சுக்குள்ளே" பாடலைப் பாடியதற்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான ஃபிலிம்பேர் விருது – தமிழ் மற்றும் சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான விஜய் விருதை வென்றுள்ளார்.[8][9]

இசைப்பயணம்

இசையமைப்பாளர்

ஆண்டு படத்தின் தலைப்பு மொழி இயக்குநர் நடிகர்கள்
2023 தி டெஸ்ட் தமிழ் எஸ். சசிகாந்த் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின்


பின்னணிக் குரல் கலைஞராக

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்
2013 கடல் தமிழ் லட்சுமி மஞ்சு
2013 அன்னையும் ரசூலும் மலையாளம் ஆண்ட்ரியா ஜெரேமியா
2021 மாறா தமிழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
2021 நிழல் மலையாளம் நயன்தாரா

தொலைக்காட்சி

  • வாணி ராணி – 2013
  • கலர்ஸ் தமிழ் சிங்கிங் ஸ்டார்ஸ் – நடுவர்
  • ஃப்ளவர்ஸ் மலையாளம் தொலைக்காட்சியின் சிறந்த பாடகர் - நடுவர்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

குறிப்புகள்

  1. "Know your stars: Shakthisree Gopalan" இம் மூலத்தில் இருந்து 18 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121118010356/http://indianrockmp3.com/2010/11/14/star-profile-shakthisree-gopalan/. 
  2. "Singing away to glory". The Hindu (Chennai, India). 15 November 2012. http://www.thehindu.com/arts/music/singing-away-to-glory/article4098414.ece. 
  3. Kamath, Sudhish (13 January 2011). "Three's Company". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/arts/music/article1089704.ece. பார்த்த நாள்: 7 November 2012. 
  4. Ramanujam, Srinivasa (2015-11-05). "Taking the retro route". The Hindu. http://www.thehindu.com/features/november-fest/retro-music-at-the-hindu-november-fest/article7845875.ece. பார்த்த நாள்: 2017-09-26. 
  5. Nathan, Archana. "'An explorer at heart': Shakthisree Gopalan on her film songs and indie music" (in en-US). https://scroll.in/reel/895021/an-explorer-at-heart-shakthisree-gopalan-on-her-film-songs-and-indie-music. 
  6. "Shakthisree Gopalan's new indie single Begin releases today". The New Indian Express. http://www.indulgexpress.com/entertainment/celebs/2017/nov/03/shakthisree-gopalans-new-indie-single-begin-releases-today-4445--1.html. 
  7. "Anirudh to release Shakthisree's single". http://www.thehindu.com/entertainment/movies/Anirudh-to-release-Shakthisree%E2%80%99s-single/article16917859.ece. 
  8. "I would like to play a superwoman: Shakthisree Gopalan". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/I-would-like-to-play-a-superwoman-Shakthisree-Gopalan/articleshow/46297150.cms. 
  9. "Shakthisree Gopalan comes to M-Town". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Shakthisree-Gopalan-comes-to-M-Town/articleshow/19678329.cms. 
"https://tamilar.wiki/index.php?title=சக்திஸ்ரீ_கோபாலன்&oldid=8836" இருந்து மீள்விக்கப்பட்டது