ஷான் ரோல்டன்
ஷான் ரோல்டன் ( Sean Roldan ) என்பவர் கர்நாடக இசைக்கலைஞர் மற்றும் தமிழ்திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். இவரது இயற்பெயர் இராகவேந்திரா ஆகும். இந்தப் பெயரிலேயே கர்நாடக இசைப்பாடகராக மேடையேறுகிறார். இவர் பாலாஜி மோகனின் தமிழ்-மலையாளப் படமான வாயை மூடி பேசவும் / சம்சாரம் ஆரோக்யதின்னு ஹனிகாரம் (2014) படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானவர்.[1]
வாழ்க்கை
இராகவேந்திரனின் பெற்றோர் மிருதங்கக் கலைஞரான ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜாராவ் மற்றும் பத்மா ஆகியோராவர். இவரின் தாயாரான பத்மா தமிழ் வரலாற்றுப் புதின எழுத்தாளரான சாண்டில்யனின் மகள் ஆவார். தாத்தாவின் பெயரான சாண்டில்யன் என்பதை சான் என சுருக்கிக்கொண்டுள்ளார்.[2] இவர் ஒரு பக்கம், கர்னாடக இசைக் கச்சேரிகளில் பாடுகிறார். மற்றொரு பக்கம் ‘ஷான் ரால்டன் அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ என்னும் இசைக் குழுவின் இசையமைப்பாளர், பாடகர், கித்தார் கலைஞர் மற்றும் பாடலாசிரியராக உள்ளார்.[3]
திரையிசையில்
இசைக்கலைஞராக
ஆண்டு |
தமிழ் | பிற மொழி | குறிப்பு |
---|---|---|---|
2014 | வாயை மூடி பேசவும்
|
சம்சாரம் ஆராக்யதினு | |
சதுரங்க வேட்டை | |||
முண்டாசுப்பட்டி | |||
ஆடாம ஜெயிச்சோமடா | |||
2015 | 144 | ||
2016 | ஜோக்கர் | ||
2017 | பா பாண்டி | ||
நெருப்புடா | |||
கதா நாயகன் | |||
வேளையில்லா பட்டதாரி 2 | தெலுங்கு, இந்தி | ||
2018 | காத்திருப்பு பட்டியல் | ||
2019 | மெகந்தி சர்கஸ் | ||
ராட்சசி | |||
2020 | தாரால பிரபு | "காதல் தீவே" பாடல் மட்டும் | |
2021 | கசட தபர | "நீ போதும் கண்ணா" பாடல் மட்டும் | |
ஜெய் பீம் | |||
2022 | பறை |
பாடகராக
ஆண்டு | படம் | பாடல் |
---|---|---|
2014 | ஜிகர்தண்டா | ஹோ ஹா |
2014 | குக்கூ | மனசுல சூறக் காத்தே |
2014 | குக்கூ | பொட்ட புள்ள |
2015 | நானும் |
கண்ணானக் கண்ணே |
2016 | இறுதிச்சுற்று |
வா மச்சானே |
ஜில் ஜங் ஜக் | ரெட் ரோட் உ | |
ஒரு நாள் கூத்து |
அடியே அழகே |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ http://www.indiaglitz.com/balaji-mohan-has-a-keen-music-sense-sean-roldan-tamil-news-104731
- ↑ "புறப்படும் புதிய இசை! - இசை அறை ஒண்ணு விழுந்துச்சு!". தி இந்து (தமிழ்). 1 ஏப்ரல் 2016. http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%92%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article8421985.ece. பார்த்த நாள்: 23 சூன் 2016.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-04-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140428033758/http://www.watevermusic.com/db/bands.php/?band=131.