முதல் ஆசை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முதல் ஆசை
இயக்கம்ஏ. ஆர். மதியழகன்
தயாரிப்புஏ. ஏ. கரீம்
கதைஏ. ஆர். மதியழகன்
இசைசௌந்தர்யன்
நடிப்பு
  • கணேஷ்
  • சந்தோஷ்
  • சித்தாரா வைத்தியா
ஒளிப்பதிவுகே. வி. சுரேஷ்
படத்தொகுப்புகே. பழனிவேல்
கலையகம்எடிசன் தியேட்டர்ஸ
வெளியீடுசெப்டம்பர் 23, 2005 (2005-09-23)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முதல் ஆசை (Mudhal Aasai) என்பது 2005 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்பு திரைப்படம் ஆகும். ஏ. ஆர். மதியழகன் இயக்கிய இப்படத்தில் புதுமுகங்களான கணேஷ், சந்தோஷ், சித்தாரா வைத்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இதில் சிட்டி பாபு, மயில்சாமி, சாப்ளின் பாலு, கணேஷ்கர், பாண்டு, மோகன் ராமன், மகாநதி சங்கர், நளினி, சகீலா, இந்து ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, ஏ. ஏ. கரீம் தயாரிக்க, சௌந்தர்யன் இசையமைத்தார். படமானது 2005 செப்டம்பர் 23 அன்று வெளியானது [1][2][3]

கதை

கணேஷ் (கணேஷ்) தனது மூன்று நண்பர்களுடன் ( மயில்சாமி, சாப்ளின் பாலு, கணேஷ்கர் ) சென்னையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வசித்து வருபவர். கணேசுக்கு இயந்திர பழுதுபார்க்கும் பட்டறையில் பணிபுரியும் விக்னேஷ் (சந்தோஷ்) என்ற நண்பரும் உண்டு. ஒரு இரவு, விக்னேசின் பட்டறையின் அருகே தொலைக்காட்சி செய்தியாளரான பிரியாவின் (சித்தார வைத்யா) மகிழுந்து பழுதாகி நின்றுவிடுகிறது. விக்னேஷ் அவளது காரை பழுதுபார்க்கிறான். அவனுக்கு பிரியா மீது காதல் பிறக்கிறது. ஒரு நாள், கணேஷ் பிரியாவை குண்டர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். அவள் அவனைக் காதலிக்கிறாள். பின்னர் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். இதற்கிடையில், நகரத்தில் பலர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இதன்பிறகு, பிரியா ஊழல் அரசியல்வாதியான ஆளவந்தனை ( மகாநதி சங்கர் ) செவ்வி காண்கிறாள். அப்போது அவர் செய்த தவறுகள் குறித்து கேள்வி எழுப்புகிறாள். நேர்காணல் முடிந்த பிறகு, அவளை பழிவாங்கும் நோக்கத்துடன் ஆலவந்தன் தனது வீட்டில் வைத்தே அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். ஆனால் இதிலிருந்து அவள் தப்பித்துச் செல்கிறாள். இரவு, ஆளவந்தன் கணேஷால் கொல்லப்படுகிறான். உண்மையில், கணேஷ் ஒரு மர்மக் கொலையாளியாவான். ஆளவந்தன் கொலைக்கு சாட்சியான பிரியாவின் நெருங்கிய தோழியான ரேகாவைக் கணேஷ் கொன்றுவிடுகிறான்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, பத்து வயது கணேஷ் தனது விதவை தாய் உமா (இந்து) உடன் விருந்தினர் இல்லத்தில் வசித்து வருகிறான். ஒரு நாள், உமா தனது முதலாளியின் நகைகளை திருடியதாக போலீசார் சந்தேகித்தனர். அவரை கைது செய்த காவல் துறையினர். காவல் நிலையத்தில், உமாவின் உடைகளைக் களைந்து, அவரது மானத்தை வாங்குகின்றனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். பழிவாங்கும் எண்ணம் கொண்ட கணேஷ் தனது தாயை அவமானப்படுத்திய காவல் ஆய்வாளரைக் கொல்கிறான். இந்தக் கொலைக்கு அவனுக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து விக்னேஷ் இளைஞனாக வெளியே வருகிறான். பின்னர் அவன் பிரியாவை பார்த்து, அவளிடம் காதல் கொள்கிறான். கணேஷ் அவளைப் பின்தொடர்கிறான். அவன் தான் ஒரு வேலையற்ற பட்டதாரி என்று தன்னை அவளிடம் காட்டிக்கொள்கிறான். மனநோய்க்கு ஆளான கணேஷ் பின்னர் தனது வழியில் குறுக்கே நின்ற அல்லது தன் காதலி பிரியாவுக்கு தீங்கு விளைவிக்க முயன்ற அனைவரையும் கொன்றான்.

விக்னேசும், பிரியாவும் இறுதியில் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். விக்னேஷை மணந்தால் கொலை செய்வேன் என்று கணேஷ் மிரட்டுகிறான். கணேஷ் தன்னை காதலிக்கிறான் என்று பிரியாவுக்குத் தெரிந்த பிறகு, அவனைச் சந்தித்து, பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்கிறாள். கணேஷ் சிறுவனாக இருந்தபோது அவன் வாழ்ந்த விருந்தினர் இல்லத்தைக் கண்டுபிடிக்கும் பிரியா அவனது நாட்குறிப்பைப் படிக்கிறாள். அதில் தான் எல்லாவற்றையும் விட பிரியாவை நேசிப்பதாகவும், விக்னேஷைக் கொல்லப் போவதாகவும் கணேஷ் எழுதியிருந்தான். விருந்தினர் இல்லத்துக்கு வந்த கணேசும் விக்னேசும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். அப்போது பிரியா அந்த இடத்திலிருந்து ஓடிவிடுகிறார்கள். துறைமுகத்தில், கணேஷ் விக்னேசைக் கொல்ல முயற்சிக்கிறான், ஆனால் பிரியா கணேசை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறாள்.

நடிகர்கள்

இசை

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை திரைப்பட இசையமைப்பாளர் சௌந்தர்யன் மேற்கொண்டார். காமகோடியன், யுகபாரதி, சினேகன் ஆகியோர் 5 பாடல்களுக்கான வரிகளை எழுதினர்.[4][5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "பட்டுப் பூச்சி"  கார்த்திக், மாலதி லட்சுமணன் 5:29
2. "ஒசாமாவின் தங்கச்சிய"  திப்பு 4:42
3. "கோடாலி மூக்கழகி"  மாணிக்க விநாயகம், கிரேஸ் கருணாஸ் 5:32
4. "கடல் என்று"  கார்த்திக், சுவர்ணலதா 4:35
5. "ஆகாயமே நீ"  அனுராதா ஸ்ரீராம் 5:16
மொத்த நீளம்:
25:34

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முதல்_ஆசை&oldid=36689" இருந்து மீள்விக்கப்பட்டது