ஆள்கூறுகள்: 12°32′34″N 78°21′25″E / 12.542900°N 78.357000°E / 12.542900; 78.357000

பருகூர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பருகூர்
பருகூர்
அமைவிடம்: பருகூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°32′34″N 78°21′25″E / 12.542900°N 78.357000°E / 12.542900; 78.357000
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கிருஷ்ணகிரி
வட்டம் பர்கூர் வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 16,366 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


503 மீட்டர்கள் (1,650 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/bargur


பருகூர் (Bargur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பருகூர் வட்டம் மற்றும் பருகூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும்.[3] பருகூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், கிரானைட்டு கற்கள் கொண்ட நகரமாகும். பருகூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

அமைவிடம்

பெங்களூருசென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் உள்ளது. பர்கூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 31 கி.மீ. தொலைவில் உள்ள ஜோலார்பேட்டையில் அமைந்துள்ளது.

இதன் கிழக்கில் திருப்பத்தூர் 26 கி.மீ.; மேற்கில் கிருஷ்ணகிரி 16 கி.மீ.; வடக்கில் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் குப்பம் 24 கி.மீ.; தெற்கில் தர்மபுரி 65 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

22.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 32 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பர்கூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,760 வீடுகளும், 16,366 மக்கள்தொகையும் கொண்டது.[6]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  4. "கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி- ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225885-krishnagiri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025. 
  5. பர்கூர் பேரூராட்சியின் இணையதளம்
  6. Bargur Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=பருகூர்&oldid=426898" இலிருந்து மீள்விக்கப்பட்டது