பரிதியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருக்குறள் பழைய உரையாசிரியர்கள் பதின்மரில் பரிதியாரும் ஒருவர். இவர் பெயரைப் ‘பருதியார்’ எனவும் எழுதுவர். காலிங்கர் உரைக்கு முற்பட்டது

  • காலம் 13ஆம் நூற்றாண்டு.

இவர் உரை. மணக்குடவரின் திருக்குறள் வைப்புமுறையை மாற்றி இவர் தனக்கென ஒர் வைப்புமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இவரது உரை சுருக்கமாக, செய்தி விளக்கமாக உள்ளது.

எடுத்துக்காட்டு

  • திருநாளும் தினபூசையும் உண்டாகாது, பூலோகத்தில் மழை பெய்யாவிடில் என்றவாறு [1]
  • கிலேசம் அருளை விரும்பினாரிடத்து வராது; அதற்கு வாயு வழங்கும் பூமி சாட்சி என்றவாறு.[2]
  • முகம் மலரவும், காரியம் கெடவும் செய்வது நட்பு அன்று; மனம் மகிழவும் காரியம் ஆகவும் கூடுவது நட்பு என்றவாறு.[3]

சமயம்

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு" என்னும் திருக்குறளுக்கு உரை எழுதும்போது "எந்தத் தேசமேயானாலும் தன் தேசமேயாம்; மால் ஊராகிய வைகுண்டப் பதம் மறுமைக்கு ஆம். அதனால் சாம் அளவும் கல்வியே பயிலுவான்" என்று குறிப்பிடுகிறார்.[4] இதனால் இவர் வைணவ சமயத்தவர் எனத் தெரிகிறது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
  • திருக்குறள் உரைக்கொத்து, தா. ம. வெள்ளைவாரணம் பதிப்பு, திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் வெளியீடு, 1983

அடிக்குறிப்பு

  1. சிறப்பொடு பூசனை செல்லாது - என்னும் குறளுக்கு (18)
  2. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை – என்னும் குறளுக்கு (245)
  3. முகநக நட்பது நட்பன்று – என்னும் குறளுக்கு (786)
  4. திருக்குறள் பரிமேலழகர் வரிசை எண் 397, பரிதியார் வைப்பு வரிசை எண் 392 உரை, திருக்குறள் உரைக்கொத்து பொருட்பால், ஸ்ரீ காசி மடம் - திருப்பனந்தாள், 1990
"https://tamilar.wiki/index.php?title=பரிதியார்&oldid=16003" இருந்து மீள்விக்கப்பட்டது