திருக்குறள் பாயிரம்
Jump to navigation
Jump to search
திருக்குறள் பாயிரம் என்று கூறப்படுவது, திருக்குறளிலுள்ள 133 அதிகாரங்களில் முதல் நான்கு அதிகாரங்கள். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று முறையே அவற்றிற்கு அதிகாரப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
திருக்குறள் கடவுள் என்னும் சொல்லை எங்கும் கையாளவில்லை. எனவே இச்சொல்லோடு பெயர் சூட்டுதல் தகாது எனக் கருதும் அறிஞர்கள் முதல் 10 குறள்களில் பயின்றுவரும் ‘இறை’. ‘வணங்குதல்’ என்னும் சொற்களைக் கொண்டு ‘இறைவணக்கம்’ எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
அதிகாரத் தலைப்புப் பெயர்கள் திருக்குறளின் ஆசிரியரான திருவள்ளுவரால் சூட்டப்பட்டவை அன்று என்பதை திருக்குறள் பழைய உரைகள் சூட்டியுள்ள பெயர்களால் அறியலாம்.
- மனக்கண்ணில் வரும் இறைவன், வள்ளுவர் பார்வை முதல் அதிகாரம்
- மன்னுயிரைக் காக்கும் மழையிறைவன் இரண்டாவது அதிகாரம்.
- தனிமனிதனை வழிநடத்தும் நீத்தார் மூன்றாவது அதிகாரம்.
- ஒட்டுமொத்த மாந்தரை வாழச்செய்யும் அறநெறி நான்காவது அதிகாரம்
இவை நான்கும் ஆற்றொழுக்கு என்னும் அறமாகப் பாய்ந்து. வாழ்க்கை என்னும் பொருளை இன்புறச் செய்யும் என்று கூறுவது திருக்குறள்.