திருக்குறள் நுண்பொருள்மாலை
Jump to navigation
Jump to search
திருக்குறள் நுண்பொருள்மாலை [1] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரி இரத்தினக் கவிராயர் என்பவரால் எழுதப்பட்ட உரைநூல் குறிப்பு. இது திருக்குறள் பரிமேலழகர் உரைக்குத் தரும் சிறப்பு விளக்கமாகத் திகழ்கிறது. இது தனி நூலாக வெளிவரவில்லை. எனினும், 'திருக்குறள் உரைவளம்' [2] என்னும் நூலில் இவரது உரை இணைக்கப்பட்டுள்ளது. [3]
திருக்குறள் நுண்பொருள்மாலையில் காணப்படும் குறிப்புகளில் சில
- அவாய்நிலை, புணர்ச்சி விகாரம், எச்சம், அன்மொழித்தொகை [4] முதலான இலக்கணப் பகுதிகளுக்கு இவர் விளக்கம் அளித்துள்ளார்.
- தோணி தரை தட்டிற்று என்பதைச் 'சில்லம் தட்டிற்று' என்கிறார்.
- திருக்குறள் அறத்துப்பால் உரையில் இவரது குறிப்புகள் மிகுதி.
அடிக்குறிப்புகள்
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014.
- ↑ தண்டபாணி தேசிகர் தொகுப்பு, தரும்புர ஆதீனப் பதிப்பு
- ↑ "அறத்துப்பால் பரிமேலழகர் ஐயன் உரையுள் இரத்தினக் கவிராயன் எடுத்துச் சேர்த்த நுண்பொருள்மாலை முற்றிற்று" என்னும் குறிப்புடன் இவரது உரை இணைக்கப்பட்டுள்ளது.
- ↑ 15, 25, 113, 380 திருக்குறள் பகுதி விளக்கங்கள்