நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)
திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி
இயக்கம்அருண்ராஜா காமராஜ்
தயாரிப்புபோனி கபூர்
திரைக்கதைஅருண்ராஜா காமராஜ்
இசைதிபு நினன் தாமஸ்
நடிப்புஉதயநிதி ஸ்டாலின்
ஆரி (நடிகர்)
தன்யா இரவிச்சந்திரன்
சிவானி ராஜசேகர்
ஒளிப்பதிவுதினேஷ்பி. கிருஷ்ணன்
படத்தொகுப்புரூபன்
கலையகம்ஜீ ஸ்டூடியோஸ்
பேவியூ பிராஜக்ட்ஸ்
ரோமியோ பிக்சர்ஸ்
விநியோகம்ரெட் ஜெயன்ட் மூவீசு
வெளியீடுமே 20, 2022 (2022-05-20)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெஞ்சுக்கு நீதி (Nenjuku Needhi) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் மொழி அரசியல் நாடகத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்தார். இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படமான ஆர்டடிகில் 15 இன் மறுஉருவாக்கமாகும். இதில் உதயநிதி ஸ்டாலின், ஆரி அருஜுனன், தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ஷிவானி ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பிற குற்றங்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள சாதி அமைப்புக்கு எதிராக ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி தாக்குதலைத் தொடங்குவதைச் சுற்றி படம் சுழல்கிறது.

படத்தின் முதன்மை படப்பிடிப்பு ஏப்ரல் 2021 இல் தொடங்கி அந்த டிசம்பரில் முடிவடைந்தது . நெஞ்சுக்கு நீதி திரைப்படம் 20 மே 2022 அன்று திரையரங்குகளில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, உதயநிதியின் நடிப்பு மற்றும் கதைக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்தது. [2]

கதைக்களம்

இந்தியக் காவல் பணி அதிகாரியான விஜய ராகவன் (உதயநிதி ஸ்டாலின்) சாதிப் பாகுபாடும் தீண்டாமையும் இன்னும் நடைமுறையில் உள்ள தமிழகத்தின் கிராமப்புறப் பகுதியில் பணியமர்த்தப்படுகிறார். விஜய ராகவன் பல புத்தகங்களில் பாகுபாடு பற்றி படித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது அவருக்கு கடினமாக உள்ளது. அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களின் சித்தாந்தங்களுடன் இன்னும் போராடி அவர்களுக்கு கல்வி கற்பிக்க முயற்சிக்கும்போது, உள்ளூர் தொழிற்சாலையில் பணிபுரிந்த மூன்று தலித் சிறுமிகள் காணாமல் போன ஒரு மர்மமான வழக்கு, அவரது வாழ்க்கையை மேலும் துயரமாக்குகிறது. இருவர் இறந்து கிடக்கிறார்கள், ஆனால் மூன்றாவது நபரின் தடயமே இல்லாததால், வழக்கு சிக்கலானதாகிறது. இந்தக் கொடூரமான குற்றத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? சாதிவெறி கொண்ட உயர் அதிகாரிகளின் அழுத்தத்தை மீறி விஜய ராகவன் இந்த வழக்கை எப்படி முன்னெடுத்துச் செல்கிறார்? என்பதுதான் கதைக்களத்தின் மீதமுள்ள பகுதியை உருவாக்குகிறது.

நடிகர்கள்

 

தயாரிப்பு பணிகள்

செப்டம்பர் 2019 இல், போனி கபூர் 2019 இந்தி திரைப்படமான ஆர்டடிகில் 15 இன் தமிழ் மறு உருவாக்க உரிமையை வாங்கியதாக அறிவிக்கப்பட்டது. [6] ஆகஸ்ட் 2020 இல், மறு உருவாக்கம் உருவாகி வருவதாக கபூர் உறுதிப்படுத்தினார். கனா (2019) படத்திற்குப் பிறகு அருண்ராஜா காமராஜ் இயக்கும் இரண்டாவது படம் இது. முதலில் ஆயுஷ்மான் குரானா நடித்த பாத்திரத்திற்கு உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். [7] பொள்ளாச்சியில் ஏப்ரல் 2021 இல் முதன்மை படப்படிப்பு தொடங்கியது. [8] நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு உதயநிதியின் தாத்தா மு. கருணாநிதியின் சுயசரிதையின் நினைவாக 16 அக்டோபர் 2021 அன்று அறிவிக்கப்பட்டது [9] [10] முதன்மை படப்பிடிப்பு டிசம்பர் மத்தியில் இறுதி செய்யப்பட்டது.[11]

வெளியீடு - திரையரங்கம்

நெஞ்சுக்கு நீதி 20 மே 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது [12] இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இது முதலில் மார்ச் 2022 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் பிற படங்களான எதற்கும் துணிந்தவன் மற்றும் ராதே ஷியாம் போன்றவற்றுடன் மோதலைத் தவிர்க்கும் பொருட்டு தாமதமானது. [13]

வீட்டு ஊடகம்

நெஞ்சுக்கு நீதி படத்தின் திரையரங்குகளுக்குப் பிந்தைய இணைய வழித் திரையிடல் உரிமையை சோனிலைவ் வாங்கியுள்ளது. [14] படம் 23 ஜூன் 2022 முதல் அங்கு வீட்டு ஊடகங்களில் திரையிடப்பட்டது. [15] இத்திரைப்படத்தின் ஊடக உரிமை கலைஞர் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டது, அங்கு ஆகஸ்ட் 15 அன்று திரையிடப்பட்டது. [16]

மேற்கோள்கள்

  1. "Nenjuku Needhi is a political drama, not a thriller". 17 December 2021. பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
  2. "Kamal Haasan's double congratulations to Udhayanidhi". 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
  3. "Aari Arjunan in Udhayanidhi's 'Article 15' remake". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 April 2021. Archived from the original on 18 October 2021. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  4. "Tanya pairs up with Udhay in Article 15 Tamil remake". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 May 2021. Archived from the original on 18 October 2021. பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  5. "Rajasekhar's daughter Shivani Rajsekhar joins Udhayanidhi's 'Article 15' remake". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 11 May 2021. Archived from the original on 3 July 2021. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  6. "Ajith Kumar to star in remake of Ayushmann Khurrana's 'Article 15'?". https://www.thehindu.com/entertainment/movies/ajith-kumar-to-star-in-remake-of-ayushmann-khurranas-article-15/article29330886.ece. 
  7. "Boney Kapoor to Produce Tamil Remake of Ayushmann's 'Article 15'". பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  8. "Boney Kapoor, Udhayanidhi Stalin pay tribute to Vivek on sets of Article 15 Tamil remake". பார்க்கப்பட்ட நாள் 1 November 2021.
  9. "Tamil remake of Article 15, starring Udhayanidhi, titled Nenjuku Needhi". பார்க்கப்பட்ட நாள் 18 October 2021.
  10. "Udhayanidhi, Arunraja's film titled Nenjuku Needhi". பார்க்கப்பட்ட நாள் 8 November 2021.
  11. "Shooting of Nenjukku Needhi comes to a close; Udhayanidhi Stalin begins dubbing". பார்க்கப்பட்ட நாள் 23 December 2021.
  12. "Udhayanidhi's Nenjuku Needhi to hit the screens on May 20". 16 April 2022. பார்க்கப்பட்ட நாள் 16 April 2022.
  13. "Release of Udhayanidhi Stalin's Nenjuku Needhi Pushed to Avoid Box Office Clash With..." 26 February 2022. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
  14. "Udhayanidhi Stalin's Nenjukku Needhi's digital rights bagged by Sony LIV?". பார்க்கப்பட்ட நாள் 29 May 2022.
  15. "Udhayanidhi Stalin's Nenjuku Needhi to make its digital premiere, details inside". பார்க்கப்பட்ட நாள் 23 June 2022.
  16. "Nenjuku Needhi - Independence Day Premier Movie On Kalaignar TV". பார்க்கப்பட்ட நாள் 11 November 2022.

வெளி இணைப்புகள்