ரூபன் (படத்தொகுப்பாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரூபன்
பிறப்புலிவிங்ஸ்டன் அந்தோணி ரூபென்
நவம்பர் 15, 1986 (1986-11-15) (அகவை 37)
கும்பகோணம், தமிழ் நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்அந்தோணி.எல். ரூபென்
பணிபடத்தொகுப்பாளர்

ரூபன் என்றழைக்கப்படும் லிவிங்ஸ்டன் அந்தோனி ரூபன் (Livingston Antony Ruben, பிறப்பு: நவம்பர் 15, 1986) இந்திய படத்தொகுப்பாளர் ஆவார். இவர் தமிழ் திரைபடத்துறையில் பணியாற்றிவருகிறார்.[1]

தொழில்

தனது பட்டப்படிப்பு லயோலா கல்லூரி சென்னையில் முடித்தபின் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களின் உதவியாளராக சேர்ந்தார். பிரபல படத்தொகுப்பாளர் அந்தோணியுடன் துணை படத்தொகுப்பாளராக இணைந்தார். ரூபென் அவர்கள் அந்தோணியின் மேற்பார்வையில் வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா முதலிய திரைப்படங்களில் பணியாற்றினார். திரைப்படங்களின் முன்னோட்டக்காட்சிகள் தயாரிக்கும் போது தோரணை (2009), அவன் இவன் (2011) மற்றும் வெடி (2011) ஆகியவற்றில் பணிபுரியும் போது ​​ருபென் ஒரு திரைபடத் தொகுப்பாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.[2]

கண்டேன் 2011ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமான இப்படத்தில் தன் முழு பங்களிப்பை வெளிப்படுத்தினார். எல்ரெட் குமாரின் முப்பொழுதும் உன் கற்பனைகள் (2012) படத்தில் முக்கியமாக ஒருமுறை என்ற பாடலை சிறப்பாக ஒளிப்பதிவு செய்தார்.[2] இவரின் ஒளிப்பதிவு பணியின் சிறப்பான நேர்மறை விமர்சனம் ராஜா ராணி (2013) திரைப்படத்திற்கு கிடைத்தது. ஒளிப்பதிவாளர் அந்தோணியின் பெயரும் தன் பெயரும் ஒன்றாக இருப்பதால் தவறுகளை தவிர்க்க தனது பெயரை ரூபென் என வைத்துக்கொண்டார்.[3]

திரைப்பட வரலாறு

தொகுப்பாளராக பணி புரிந்த படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி இயக்கம்
2011 கண்டேன் தமிழ் ஏ.சி.முகில்
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் தமிழ் எல்டர்டு குமார்
2012 எடிகரிகே கன்னடம் டி.சுமனகிட்டூர்
2013 சமர் தமிழ் திரு
2013 ராஜா ராணி தமிழ் அட்லி
2014 நான் சிகப்பு மனிதன் தமிழ் திரு
2014 ஜீவா தமிழ் சுசிந்தரன்
2015 டார்லிங் தமிழ் சாம் ஆண்டன்
2015 இனிமே இப்படிதான் தமிழ் முருகானந்த்
2015 திரிஷா இல்லைனா நயன்தாரா தமிழ் ஆதிக் ரவிச்சந்திரன்
2015 வேதாளம் தமிழ் சிவா
2016 வில் அம்பு தமிழ் ரமேஷ் சுப்ரமணியன்
2016 தெறி தமிழ் அட்லி
2016 எனக்கு இன்னொரு பேர் இருக்கு தமிழ் சாம் ஆண்டன்
2016 வீர சிவாஜி தமிழ் கணேஷ் விநாயக்
2016 ரெமோ தமிழ் பாக்கியராஜ் கண்ணன்
2016 ஜக்குவார் தெலுங்கு,கன்னடம் மகாதேவ்
2017 விவேகம் தமிழ் சிவா
2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தமிழ் ஆதிக் ரவிச்சந்திரன்
2017 மெர்சல் தமிழ் அட்லி
2017 ஸ்கெட்ச் தமிழ் விஜய் சந்தர்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரூபன்_(படத்தொகுப்பாளர்)&oldid=23733" இருந்து மீள்விக்கப்பட்டது