நல்ல இடத்து சம்மந்தம்
நல்ல இடத்து சம்மந்தம் | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | வி. கே. ராமசாமி ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் ஏ. பி. நாகராஜன் |
கதை | கதை வி. கே. ராமசாமி |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | பிரேம்நசீர் எம். ஆர். ராதா வி. கே. ராமசாமி கே. சாரங்கபாணி சாய்ராம் சௌகார் ஜானகி எம். என். ராஜம் சி. கே. சரஸ்வதி வேணுபாய் மதி லட்சுமி |
வெளியீடு | பெப்ரவரி 16, 1958 |
ஓட்டம் | . |
நீளம் | 15296 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்ல இடத்து சம்மந்தம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
தயாரிப்பு
இதுவே ஏ. பி. நாகராஜன் தயாரித்த முதல் திரைப்படமாகும். அவரும் வி. கே. ராமசாமியும் இணைந்து லட்சுமி பிக்சர்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்தார்கள். வி. கே. ராமசாமி கதை எழுத, ஏ. பி. நாகராஜன் வசனங்கள் எழுதினார்.[2] எல். ஆர். ஈஸ்வரி பின்னணி பாடகியாக அறிமுகமானதும் இந்தப் படத்தில் தான். இதற்கு முன் வடிவுக்கு வளைகாப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஹம்மிங் மட்டும் கொடுத்திருந்தார். அதுவரை இவரது பெயர் டி. எல். ராஜேஸ்வரி (டேவிட் லூர்துமேரி ராஜேஸ்வரி) என்றே அறியப்பட்டது. அக்காலத்தில் இன்னொரு ராஜேஸ்வரி (எம். எஸ். ராஜேஸ்வரி) பிரபலமாக இருந்ததால் ஏ. பி. நாகராஜன் இவரது பெயரை எல். ஆர். ஈஸ்வரி என மாற்றி வைத்தார்.[3]
பாடல்கள்
திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அ. மருதகாசி, அ. ச. நாராயணன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பின்னணி பாடியவர்கள் சூலமங்கலம் ராஜேஸ்வரி, எல். ஆர். ஈஸ்வரி, கஸ்தூரி, கஜலட்சுமி, உடுத்தா ஆகியோர்.[4]
எண். | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு (m:ss) |
---|---|---|---|---|
1 | இவரே தான் அவரு | எல். ஆர். ஈஸ்வரி | அ. மருதகாசி | 02:48 |
2 | துக்கத்திலும் சிரிக்கணும் | 02:42 | ||
3 | குழந்தை போல் ஒரு கணம் .. ஜாலம் செய்வதும் | சூலமங்கலம் ராஜலட்சுமி | 04:00 | |
4 | சொன்னாலும் கேட்பதில்லை | 02:36 | ||
5 | புதுப் பெண்ணே புதுப் பெண்ணே | எல். ஆர். ஈஸ்வரி, கஸ்தூரி, கஜலட்சுமி, உடுத்தா | அ. ச. நாராயணன் | 03:12 |
6 | பொண்ணு மாப்பிளே | எல். ஆர். ஈஸ்வரி, கஸ்தூரி | 02:33 |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171209230824/http://www.lakshmansruthi.com/cineprofiles/1958-cinedetails19.asp. பார்த்த நாள்: 2017-12-01.
- ↑ 2.0 2.1 ராண்டார் கை (2013-07-20). "Nalla Idathu Sammandham (1958)" (in ஆங்கிலம்). தி இந்து இம் மூலத்தில் இருந்து 2016-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160630100121/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/nalla-idathu-sammandham-1958/article4935145.ece. பார்த்த நாள்: 2017-12-02.
- ↑ "எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடித்தான் என்னை வளர்த்தார்". 2012-08-12 இம் மூலத்தில் இருந்து 2016-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160806073554/http://archives.thinakaran.lk/2012/08/28/?fn=f1208285. பார்த்த நாள்: 2017-12-02.
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 147.