வடிவுக்கு வளைகாப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வடிவுக்கு வளைகாப்பு
1960 கலை தீபாவளி மலரில் வெளிவந்த விளம்பரம்
இயக்கம்ஏ. பி. நாகராசன்
தயாரிப்புஏ. பி. நாகராசன்
வி. கே. ராமசாமி
கதைஏ. பி. நாகராசன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
சௌகார் ஜானகி
ஒளிப்பதிவுஏ. கோபிநாத்
என். ஏ. தாரா
படத்தொகுப்புடி. ஆர். நடராஜ்
கலையகம்சிறீ லட்சுமி பிக்சர்சு
வெளியீடு7 சூலை 1962 (1962-07-07)
ஓட்டம்1,642 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வடிவுக்கு வளைகாப்பு 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

நடிகர்கள்

தயாரிப்பு

அந்த நேரத்தில் பெரும்பாலும் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய வந்த ஏ. பி. நாகராசன் இயக்குநராக அறிமுகமான படம் வடிவுக்கு வளைகாப்பு ஆகும்.[3] இவரும் வி. கே. ராமசாமியும் இணைந்து[4] சிறீ லட்சுமி பிக்சர்சு நிறுவனத்தின் சார்பில்[2] படத்தைத் தயாரித்தனர். தொடக்கத்தில் கே. சோமு திரைப்படத்தை இயக்கினார், ஆனாலும் நாகராசனின் பெயரே திரையில் காட்டப்பட்டது.[5] ஏ. கோபிநாத்தும், என். ஏ. தாரா ஒளிப்பதிவு செய்தனர், டி. ஆர். நடராஜ் படத்தொகுப்பு செய்தார். சம்பத்-சின்னி, ராஜ்குமார், தங்கராஜ், கிருஷ்ணராஜ் ஆகியோர் நடனக் காட்டிகளை அமைத்தனர். ஏ. எம். சாகுல் அமீது என்பவர் நாகராசனுக்கு நிதியுதவி செய்தார் ஆனாலும் அவர் பெயரும் தயாரிப்பாளர் பட்டியலில் காட்டப்படவில்லை.[6]

இத்திரைப்படம் முதலில் சிவாஜி கணேசனும், சாவித்ரியும் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கப்பட்டது. ஆனால் சாவித்திரி கர்ப்பமடைந்தக் காரணத்தினால் படம் சிறிது காலம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் சிவாஜி கணாசன் வி. கே. இராமசாமிக்கு எடுத்தவரையுள்ள காட்சிகளில் சாவித்திரி நடித்தக்காட்சிகளை வெட்டிவிட்டு பி. சரோஜா தேவியை வைத்து மீதி படத்தை எடுத்து முடித்தால் என்ன என்று ஆலோசனைக் கூறினார். வி. கே. இராமசாமி நாகராஜனிடம் இது குறித்து கூறியபோது, அவர் இதற்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து கிடைத்த இடெவெளியில் இருவரும் நல்ல இடத்து சம்மந்தம் படத்தைத் தயாரித்தனர்.[6] குழந்தைப் பேறுக்குப் பிறகு, சாவித்திரி மீதி திரைப்படத்திதை நடித்துக் கொடுத்தார்.[7] படத்தின் இறுதி நீளம் 15642 அடி ஆக இருந்தது.[2]

பாடல்கள்

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இடையமைத்தார்.[8]

பாடல் பாடகர்/கள் வரிகள் நீளம்
"திலகமே உலகின் திலகமே" டி. எம். சௌந்தர்ராஜன் அ. மருதகாசி 05:47
"உன் மனம் இரங்கிடவேணும்" எல். ஆர் ஈஸ்வரி (ம) குழுவினர்
"தாமதம் செய்யாதே தோழி" எஸ். வரலட்சுமி 03:30
"சீருலாவும் இன்ப நாதம் ஜீவ சங்கீதம்" டி. எம். சௌந்தர்ராஜன், பி. சுசீலா 03:18
"சாலையிலே புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம்" பி. சுசீலா, எல். ஆர் ஈஸ்வரி (ம) குழுவினர் ஏ. எஸ். நாராயணன் 03:20
"சூடு வெச்ச வெள்ளை காளை" ஆத்மசா
"நில்லடியோ நில்லடியோ நினைச்சு பார்த்து சொல்லடியோ" பி. சுசீலா கண்ணதாசன் 03:20
"பிள்ளை மனம் கலங்குதென்றால்" டி. எம். சௌந்தர்ராஜன்
"சில்லெனப் பூத்து சிரிக்கின்ற பெண்ணுக்கு" பி. சுசீலா 03:30

வெளியீடும் வரவேற்பும்

வடிவுக்கு வலை காப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலான தாமதத்திற்குப் பிறகு[9] 1962, யூலை, 7 அன்று வெளியானது.[10] தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா எழுதிய விமர்சனத்தில், "கதை மோசமாக உள்ளது, அதைச் சொல்லும் விதம் இன்னும் மோசமாக உள்ளது" என்று கூறியது.[11] கல்கியின் கந்தனும் எதிர்மறையான விமர்சனத்தை எழுதினார், வெளிப்புறக் காட்டிகளைத் தவிர வேறு எந்த அம்சமும் சிறப்பாக இல்லை என்று கூறினார்.[12]

மேற்கோள்கள்

  1. Baskaran, S. Theodore (2008). Sivaji Ganesan: Profile of An Icon. Wisdom Tree. Wisdom Tree. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8328-396-0.
  2. 2.0 2.1 2.2 "71-80". nadigarthilagam.com. p. 8. Archived from the original on 22 June 2011. பார்க்கப்பட்ட நாள் 21 June 2021.
  3. Mohan Raman (14 April 2012). "Master of mythological cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6FQl7LK5p?url=http://www.thehindu.com/features/cinema/master-of-mythological-cinema/article3314719.ece. 
  4. "1962 – வடிவுக்கு வளைகாப்பு – ஸ்ரீலஷ்மி பிக்" [1962 – Vadivukku Valai Kappu – Sri Lakshmi Pic.]. lakshmansruthi.com. Archived from the original on 15 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 October 2017.
  5. "Vadivuku Valaigappu". directorksomu.com. Archived from the original on 20 July 2016. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
  6. Nainar, Nahla (31 August 2018). "Tinsel-edged memories: glory days of Central Talkies in Tiruchi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 September 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180904151018/https://www.thehindu.com/entertainment/movies/s-rahima-shahul-hameed-central-talkies-nahla-nainar-interview-tamil-cinema/article24831877.ece. 
  7. Neelamegam, G. (November 2016). Thiraikalanjiyam — Part 2 (1st ed.). Chennai: Manivasagar Publishers. pp. 93–94.
  8. "Vadivukku Valaikappu". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 14 April 1958. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19580414&printsec=frontpage&hl=en. 
  9. "ஜூலை மாதத்தில் வெளியான படங்களின் பட்டியல்" [Films released in the month of July]. nadigarthilagam.com. Archived from the original on 19 October 2016. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வடிவுக்கு_வளைகாப்பு&oldid=37328" இருந்து மீள்விக்கப்பட்டது