அல்லி பெற்ற பிள்ளை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அல்லி பெற்ற பிள்ளை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன், வயலின் மகாதேவன், கவிஞர் அ. மருதகாசி, வி. கே. முத்துராமலிங்கம் ஆகியோர் கூட்டாகத் தயாரித்த இத் திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி இயற்றினார். பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், ஜி. ராமநாதன், எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினர்.[2]

தமது சீடரான கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் ஜி. இராமநாதன் பாடிய எஜமான் பெற்ற செல்வமே என்ற பாடல் புகழ் பெற்றது.

எண் பாடல் பாடியவர்/கள் கால அளவு
1 ஆசை அத்தான் கை பிடிக்க பி. சுசீலா 03:47
2 அறிவிருக்கும் அன்பிருக்கும் டி. எம். சௌந்தரராஜன்
3 அம்மா அப்பா என்று சீர்காழி கோவிந்தராஜன்
4 சும்மா சும்மா சிரிச்சுக்கிட்டு பி. சுசீலா
5 காத்திருக்கேன் வேலியோரம் திருச்சி லோகநாதன் & எல். ஆர். ஈஸ்வரி 03:16
6 பைசாவைப் போட்டு நைசாக வாங்கி எஸ். சி. கிருஷ்ணன்
7 எஜமான் பெற்ற செல்வமே ஜி. இராமநாதன் 03:01
8 நல்ல நாளு ரொம்ப நல்ல நாளு டி. எம். சௌந்தரராஜன் & திருச்சி லோகநாதன் 02:46
9 நல்ல நாளு ரொம்ப நல்ல நாளு டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
10 ஒண்ணும் ஒண்ணும் சேர்ந்தாக்க சீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கி 02:55

உசாத்துணை

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-03-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170312123947/http://www.lakshmansruthi.com/cineprofiles/1959-cinedetails6.asp. பார்த்த நாள்: 2017-03-27. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 160. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அல்லி_பெற்ற_பிள்ளை&oldid=30212" இருந்து மீள்விக்கப்பட்டது