தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தூக்கநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம், பத்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தூக்கநாயக்கன்பாளையத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 51,072 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 10,441 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,430 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பத்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அக்கரைகொடிவேரி
- அரக்கன்கோட்டை
- கணக்கம்பாளையம்
- கொண்டயம்பாளையம்
- கொங்கர்பாளையம்
- நஞ்செய்புளியம்பட்டி
- ஒடையகவுண்டன்பாளையம்
- பெருமுகை
- புல்லப்பநாயக்கன்பாளையம்
- புஞ்செய்துறையம்பாளையம்
வெளி இணைப்புகள்
- ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்