மொடக்குறிச்சி
Jump to navigation
Jump to search
| மொடக்குறிச்சி | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | மொடக்குறிச்சி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] |
| சட்டமன்றத் தொகுதி | மொடக்குறிச்சி
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,907 (2011[update]) • 841/km2 (2,178/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 11.78 சதுர கிலோமீட்டர்கள் (4.55 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/modakkurichi |
மொடக்குறிச்சி (ஆங்கிலம்:Modakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மொடக்குறிச்சி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு வடக்கில் 17 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 28 கி.மீ.; மேற்கில் பெருந்துறை 26 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
11.78 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 68 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,076 வீடுகளும், 9,907 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புகழ்பெற்றவர்கள்
- சுப்புலெட்சுமி ஜெகதீசன், 1977 மற்றும் 1996 ஆண்டுகளில் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். இவர் 1977 - 80-ஆம் ஆண்டுகளில் எம். ஜி. ஆர். அமைச்சரவையில் இடம் பெற்றார். பின்னர் தி.மு.க.வில் சேர்ந்து, 1989-இல் மு. கருணாநிதி அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ மொடக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Modakurichi Population Census 2011