சி. சரசுவதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சி. கே. சரஸ்வதி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் வி. பி. சிவசுப்ரமணியன்
தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு (1945-03-01)1 மார்ச்சு 1945

[1]

தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதீய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) எஸ். எஸ். சின்னுசாமி
பிள்ளைகள் கருணாம்பிகை
சிவ்குமாா்
பெற்றோர் கனகாச்சல கவுண்டா்
நஞ்சம்மாள்

சி. சரசுவதி (C.Saraswathi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

கல்வி

இவர் 1968ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து மருத்துவராக ஆனார். இவர் 1972-ல் இதே பல்கலைக்கழகத்தில் குழந்தைகள் மருத்துவத்தில் பட்டயப்படிப்பை படித்தார்.

தொழில்

இவர் ஒரு மருத்துவராக[3] இவரது கணவர் மருத்துவரான சின்னசாமியுடன் சேர்ந்து ஈரோட்டில் சி. கே. மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை நடத்துகிறார். எனவே, சில நேரங்களில், இவர் சி. கே. சரஸ்வதி என்று அழைக்கப்படுகிறார்.[சான்று தேவை] 

சட்டமன்ற உறுப்பினர்

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர், திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனை 281 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.[4]

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 மொடக்குறிச்சி பிஜேபி 78, 125

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சி._சரசுவதி&oldid=23910" இருந்து மீள்விக்கப்பட்டது