அரியப்பம்பாளையம்
அரியப்பம்பாளையம் | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | ஈரோடு | ||||||
வட்டம் | சத்தியமங்கலம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
15,706 (2011[update]) • 1,734/km2 (4,491/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 9.06 சதுர கிலோமீட்டர்கள் (3.50 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/ariyappampalayam |
அரியப்பம்பாளையம் (ஆங்கிலம்:Ariyappampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி, 1960 ல் பேரூராட்சி யாக தரம் உயர்த்தப்பட்டது.அரியப்பம்பாளையம், பழைய கலையனூர் மற்றும் புதுக்கலையனூர் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இப்பேரூராட்சியின் கிழக்கே பவானி ஆறும், தெற்கே பெரியூர் மாகாளியம்மன் கோயிலும் உள்ளன.சத்தியமங்கலம் நகரை ஒட்டிய முக்கிய நகராக வளர்ந்து வருகிறது...ஈரோடு மாவட்டத்தில் அரியப்பம்பாளையம் 12 வது பெரிய நகரமாகும்.
அமைவிடம்
அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு 58.6 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 24 கி.மீ.; மேற்கில் மேட்டுப்பாளையம் 40 கி.மீ.; வடக்கில் சத்தியமங்கலம் 2 கி.மீ.; தெற்கில் புளியம்பட்டி 20 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
9.06 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் நீலகிரி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, இப்பேரூராட்சி 4,507 வீடுகள் மற்றும் 15,706 மக்கள்தொகை கொண்டுள்ளதைக் குறிக்கிறது. [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ அரியப்பம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Ariyappampalayam Population Census 2011