துள்ளித் திரிந்த காலம்
துள்ளித் திரிந்த காலம் | |
---|---|
இயக்கம் | பாலசேகரன் |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர், பஷ்பா கந்தசாமி |
கதை | பாலசேகரன் |
இசை | ஜெயந்த் |
நடிப்பு | அருண் குமார் குஷ்பூ ரோஷினி கரண் |
ஒளிப்பதிவு | விஜய் கோபால் |
படத்தொகுப்பு | கணேஷ் |
கலையகம் | கவிதாலயா |
வெளியீடு | 12 மார்ச் 1998 |
ஓட்டம் | 150 நமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துள்ளித் திரிந்த காலம் (Thulli Thirintha Kaalam) என்பது 1998 ஆண்டைய தமிழ் நாடகத் திரைப்படம் ஆகும். பாலசேகரன் இயக்கிய இப்படத்தை கே. பாலச்சந்தர் தயாரித்தார். இப்படத்தில் அருண் குமார், குஷ்பூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும், ரோஷினி, ரகுவரன், கரண் ஆகியோர் பிற வேடங்களிலும் நடித்தனர். ஜெயந்த் இசையமைத்த இப்படம் 1998 மார்ச்சில் நேர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.
கதை
எந்த உருப்படியான செயலையும் செய்யாத நான்கு இளைஞர்கள் தங்கள் நேரத்தை வீணாக்கி வருகிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் அவர்களின் பொறுப்பற்ற நடத்தையால் சோர்ந்து போகிறார்கள். கௌசல்யா அவர்கள் அருகில் குடிவருகிறார். அவர்களின் வாழ்க்கை முறையையும் நடத்தையையும் பார்த்து, அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்கிறார்.
நடிகர்கள்
- அருண் குமார் அசோக்காக
- குஷ்பூ கௌசல்யாவாக
- ரோஷினி தேவியாக
- கரண் ரகுவாக
- ரகுவரன் சிதப்பரமாக, (கௌசல்யா மற்றும் ருகுவின் தந்தையாக)
- பாத்திமா பாபு விசாலமாக (சிதம்பரத்தின் மனைவி)
- ராம்ஜி மனோகராக
- தாமு தாமுவாக
- கொச்சி ஹனீஃபா நாயராக
- சிறீமன் சரவணனாக
- ஜெய்கணேஷ் அசோக்கின் தந்தையாக
- டெல்லி கணேஷ் தாமுவின் தந்தையாக
- இராமி ரெட்டி தேவியின் தந்தையாக
- மதன் பாப் வங்கி மேலாளராக
- மோகன் ராமன் வேலைவாய்ப்பு அலுவலர்
- மகேந்திரன் சந்தை தொழிலாளி
- சிசர் மனோகர்
- ரமேஷ் கண்ணா அவராகவே
- கவிதாலயா கிருஷ்ணன் அவராகவே
- சுவாதி சிறப்புத் தோற்றத்தில்
- அல்போன்சா சிறப்புத் தோற்றத்தில்
இசை
இப்படத்திற்கு ஜெயந்த் இசையமைத்தார்.[1]
- தீவானா - மனோ, பாப் ஷாலினி
- மண்ணில் என்ன - மனோ, மால்குடி சுபா
- ஆழகே - சித்ரா
- கௌசல்யா - ஹரிணி, பேபி தீபிகா
- டக் டக் - பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா, விஜய்
- வார்த்தை என்ன - மனோ
வெளியீடு
இந்தோலிங்க்.காமின் விமர்சகர் இந்த படம் குறித்து நேர்மறையான விமர்சனங்களை வெளியிட்டது, "இந்த கே. பாலச்சந்தர் தயாரிப்பில் புதியதாகவோ அல்லது வித்தியாசமாகவோ எதுவும் இல்லை, ஆனால் இளைஞர்களுக்கான பழைய-ஆலோசனை மசாலாவை, சில சென்டிமென்ட் ஊறுகாய், நகைச்சுவை இனிப்பு ஆகியவற்றை பாடல்களுடன் கலந்து வழங்குகிறது".[2]
இப்படம் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது, இப்படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட பதிப்புகளைத் தயாரிக்க ஊக்கபடுத்தியது.[3] அம்மாயி கோசம் என்ற தெலுங்கு மறு ஆக்கத்தில் ரவி தேஜா மற்றும் மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
குறிப்புகள்
- ↑ https://www.jiosaavn.com/album/thulli-thirintha-kaalam/P6hjVmKR0gY_
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-05-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170509173552/http://indolink.com/tamil/cinema/Reviews/articles/Thulli_Thirintha_Kaalam_8347.html.
- ↑ http://www.rediff.com/entertai/1998/dec/01ss.htm