சிம்ரன் (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிம்ரன்
Simran in 2023.jpg
பிறப்புரிஷிபாமா நவால்
4 ஏப்ரல் 1976 (1976-04-04) (அகவை 48)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
மற்ற பெயர்கள்சிம்ரன் பாமா
செயற்பாட்டுக்
காலம்
1995 - தற்போது
உயரம்5'7
வாழ்க்கைத்
துணை
தீபக் பக்கா (2003 - தற்போது)

சிம்ரன் (English: Simran, பிறப்பு:ஏப்ரல் 4, 1976) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.

சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார். 1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும். இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.[1]

தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார். சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன. இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. ஒன்ஸ்மோர் (1997)
  2. பூச்சூடவா (1997)
  3. வி.ஐ.பி (1997)
  4. நேருக்கு நேர் (1997),
  5. நட்புக்காக (1998),
  6. துள்ளாத மனமும் துள்ளும் (1998),
  7. கண்ணெதிரே தோன்றினாள் (1998),
  8. அவள் வருவாளா(திரைப்படம்) (1998),
  9. வாலி (1999),
  10. ஜோடி (1999),
  11. பிரியமானவளே (2000),
  12. உன்னை கொடு என்னைத் தருவேன்(திரைப்படம்) (2000),
  13. பார்த்தேன் ரசித்தேன் (2000),
  14. தமிழ் (2002),
  15. பஞ்சதந்திரம் (2002),
  16. ரமணா (2002),
  17. கன்னத்தில் முத்தமிட்டால் (2002),
  18. நியூ (2004),
  19. வாரணம் ஆயிரம் (2008)
  20. உதயா (2008)

மேற்கோள்கள்

  1. ச.கோபாலகிருஷ்ணன் (2 நவம்பர் 2018). "மின்னல் ஒரு கோடி". கட்டுரை (இந்து தமிழ்). https://tamil.thehindu.com/cinema/cinema-others/article25399448.ece. பார்த்த நாள்: 3 நவம்பர் 2018. 
"https://tamilar.wiki/index.php?title=சிம்ரன்_(நடிகை)&oldid=22742" இருந்து மீள்விக்கப்பட்டது