சிங்காரவேலர் விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சிங்காரவேலர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2018 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. விருது பெறுபவர்களுக்கு (இதற்கு முன் ஒரு இலட்சம் ரூபாயாக இருந்தது) இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 பா.வீரமணி[1] 2018
2 அசோகா சுப்பிரமணியன் (எ) சோ. கா. சுப்ரமணியன் 2019
3 ஆ. அழகேசன்[2] 2020
4 மதுக்கூர் இராமலிங்கம்[3] 2021

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிங்காரவேலர்_விருது&oldid=19272" இருந்து மீள்விக்கப்பட்டது